நாணயச் சேமிப்பு அட்டைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாணயச் சேமிப்பு அட்டைகள் என்பது நாணயங்களை பாதுகாப்பாக சேகரித்து வைக்க உதவுகின்ற பொருளாகும்.[1] இந்த நாணயச் சேமிப்பு அட்டைகளை சில நிறுவனங்கள் தயாரித்து விற்கின்றன. சில நாணய சேகரிப்பாளர்கள் இந்த நாணயச் சேமிப்பு அட்டைகளை தாங்களாகவும் தயாரிக்கின்றனர்.

பிளாஸ்டிக் நாணய சேமிப்பான்களை விட நாணயச் சேமிப்பு அட்டைகள் விலை குறைவானவையாக உள்ளன.

வடிவமைப்பு[தொகு]

இந்த நாணயச் சேமிப்பு அட்டைகள் 2* 2 இன்சு அளவில் காகித அட்டைகளில் உருவாக்கப்படுகின்றன. நாணயத்தினை சேமிக்க அட்டைகளில் பல்வேறு விட்டங்களில் வட்ட வடிவில் அட்டைகள் வெட்டப்பட்டு இருபுறமும் நெகிழியால் சூழப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் நாணயங்களை வைக்கும் போது நாணயங்கள் தேய்மானம் இன்றியும், காற்று பூகாமல் இருப்பதால் நாணயங்கள் பாதுகாப்பாகவும் இருக்கின்றன.

அளவுகள்[தொகு]

இந்த நாணயச் சேமிப்பு அட்டைகள் பல்வேறு அளவுகளில் நாணயங்களுக்கு ஏற்றவாறு விட்டம் கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன.

  1. 15 மில்லிமீட்டர்,
  2. 17.5 மில்லிமீட்டர்,
  3. 20 மில்லிமீட்டர்,
  4. 22.5 மில்லிமீட்டர்,
  5. 27.5 மில்லிமீட்டர்,
  6. 30 மில்லிமீட்டர்,
  7. 33 மில்லிமீட்டர்,
  8. 35 மில்லிமீட்டர்,
  9. 37 மில்லிமீட்டர்

மேற்கண்ட விட்ட அளவுகளில் நாணய அட்டைகள் கிடைக்கின்றன.


இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-11. பார்க்கப்பட்ட நாள் 2020-07-09.