நற்சேந்தனார்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நற்சேந்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது நற்றிணை 128 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]தினைப்புனம் காவலின்போது ஒருவன் வந்து என் முதுகைத் தழுவினான். அவன் நினைவுதான் என்னை வாடச் செய்துள்ளது. - இவ்வாறு தலைவி தன் தோழியிடம் சொல்லி அறத்தொடு நிற்கிறாள்.
உவமை நலம்
[தொகு]தலைவி தலைவன் நினைவால் வாடியுள்ளதை விளக்கும் உவமைகள்
- சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கைப் போலக் காணப்பட்டாள்.
- பாம்பு விழுங்கிய (கிரகணம் பிடித்த) மதியம் போல அவள் நெற்றி ஒளி மங்கிப் போயிற்று.
- ஒரு உயிரை இரண்டாகப் பிரித்து வைத்தது போன்று இணை பிரியாதவர்கள்.