நரேந்திர பிரசாத்
Appearance
நரேந்திர பிரசாத் (Narendra Prasad) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணராவார். [1][2] பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறைகளின் முன்னாள் தலைவராகவும், இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் பீகார் மாநில அத்தியாயத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். [3] மருத்துவத் துறையில் நரேந்திர பிரசாத் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2015 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த இந்திய சிவில் விருதான பத்மசிறீ விருதை அவருக்கு வழங்கியது. [4] பிரசாத் பாட்னா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பாடத்தில் பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டில் இராயல் கல்லூரியின் அறுவைசிகிச்சை உறுப்பினர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றார். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ H. K. Sinha, ed. (1998). Challenges in Rural Development. Discovery Publishing House. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171414147.
- ↑ "Sehat". Sehat. 2015. Archived from the original on 2 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச்சு 2015.
- ↑ 3.0 3.1 Chaudhary, Pranav (26 January 2015). "2 from Bihar get Padma Shri". Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.