நகுஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நகுசன் என்பவர் இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் வருகின்ற ஒரு புராணக் கதை மாந்தர் ஆவார். இவர் சந்திர வம்சத்தவர் ஆவார். இவர் ஆயு என்பவரின் மகனும், புரூரவன்-இலா தம்பதியரின் பேரனும் ஆவார். இவரது மகன் புகழ்பெற்ற யயாதி ஆவார்.

இவர் நூறு அசுவமதயாகம் நடத்தி இந்திரனாகும் வாய்ப்பினைப் பெற்றார். இந்திரப் பதவியைப் பெற்றமையால் சப்த முனிவர்கள் இவரை சுமந்து சென்றனர். அவர்களில் அகத்தியர் குள்ளமானராக இருந்தமையால் பல்லக்கினை சுமந்து மெதுவாக நடந்தார். இதனால் கோபம் கொண்ட நகுசன் அகத்தியரை சீண்டினான்.

இதனால் கோபம் கொண்ட அகத்தியர் நகுசனை பாம்பாக மாறுமாறு சபித்தார். இவர் பாம்பாக மாறி பூமியில் விழுந்தார். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனை விழுங்கினார். அப்போது தர்மனின் அறிவுரைக் கேட்ட நகுசன் சாபம் நீங்கப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுஷன்&oldid=3519086" இலிருந்து மீள்விக்கப்பட்டது