உள்ளடக்கத்துக்குச் செல்

தோலேரா சூரியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோலேரா சூரியப் பூங்கா (Dholera Solar Park) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் அமைந்துள்ள தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தில் திட்டமிடப்பட்டுள்ள பெரிய அளவிலான சூரிய சக்தி திட்டமாகும். [1] [2] இது இந்திய நாட்டின் மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால், தீவிர மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இதன் திறன் 5 கிகாவாட்டு ஆக இருக்கும். [3] [4]

வரலாறு

[தொகு]

பின்னணி

[தொகு]

2022 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 175 கிகாவாட்டாக அதிகரிக்க இந்திய அரசு இலக்கு வைத்துள்ளது [5] 2022 ஆம் ஆண்டில் 100 கிகாவாட்டு மின்சக்தியை எட்டுவதை தேசிய சூரிய ஒளித்திட்ட அமைப்பு தன் இலக்காக முடிவு செய்தது. [6] ஆனால் முதலில் இந்தியா 20 கிகாவாட்டு மின்சக்தியை அடைவதை இலக்கைக் கொண்டிருந்தது; இந்த இலக்கு மேலும் நான்கு ஆண்டுகள் உள்ள நிலையிலேயே எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி அரசு உற்பத்தி இலக்கை 100 கிகாவாட்டாக உயர்த்தியது. [7]

ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் குசராத்து மாநில முதல்வர் தோலேரா சூரியப் பூங்காவிற்கு ஒப்புதல் அளித்தார் [8]

ஏலங்கள்

[தொகு]

2020 ஆம் ஆண்டில்[9] ஏலங்கள் நடத்தப்பட்டன. கூடுதலாக 600 மெகாவாட் மின் உற்பத்தி காணப்பட்டது. [10] ஓர் அலகு மின்சார கட்டணம் 2.78 (3.5¢ US) மற்றும் 2.81 (3.5¢ US) என மதிப்பிடப்பட்டது. ஐந்து நிறுவனங்களுக்கு தலா 100-200 மெகாவாட் என ஒதுக்கப்பட்டது. எனினும் பின்வரும் குறைந்த கட்டணங்கள் 1.99 (2.5¢ US) ஓர் அலகுக்கு என நிர்ணயித்து அடுத்தடுத்த ஏலங்களின் போது, அசல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஏலங்கள் விடப்பட்டன. [9] 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் குசராத்தில் இதேபோன்ற ரத்து செய்யப்பட்டன. [11] குசராத்தில் இவ்வாறு இரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் விளைவாக உத்தரபிரதேசமும் 500 மெகாவாட் சூரிய சக்தி ஏலத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது. [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dholera Solar Park, Gujarat". Power Technology (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  2. Gupta, Uma (17 March 2021). "Gujarat retenders 700 MW in Dholera Solar Park and 100 MW in Raghanesda". pv magazine India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  3. "TATA Power lays foundation of 400 MW (AC) Solar Power Project at the 5000 MW Solar Park in Dholera Special Investment Region in Gujarat". EquityBulls. 2020-10-17. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  4. "Gujarat's solar flip ups the risk of a larger flop". mint (in ஆங்கிலம்). 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-05-16.
  5. Dave, Kapil Dave (11 April 2018). "5,000MW solar park to come up in Dholera". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  6. "Current Status | Ministry of New and Renewable Energy, Government of India". Ministry of New and Renewable Energy, Government of India. Archived from the original on 21 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  7. "Is India's solar power sector ready for its technology-driven metamorphosis?". ETEnergyworld (in ஆங்கிலம்). 3 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  8. "World's largest solar park to come up in Gujarat: CM Vijay Rupani". The Economic Times. PTI. 10 April 2018. https://economictimes.indiatimes.com/industry/energy/power/worlds-largest-solar-park-to-come-up-in-gujarat-cm-vijay-rupani/articleshow/63702087.cms?from=mdr. 
  9. 9.0 9.1 Chandrasekaran, Kaavya (1 February 2021). "Gujarat cancels results of solar auctions, feels tariffs are high". ETEnergyworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  10. Prateek, Saumy (1 August 2020). "Dholera Solar Park Tender Oversubscribed by 600 MW - Saur Energy International". Saur Energy. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
  11. Prasad, Nithin Thomas (2021-02-03). "In Another Bad Precedent, Gujarat Regulator Allows DISCOM to Scrap 700 MW Solar Auction". Mercom India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
  12. Ranjan, Rakesh (2021-06-03). "Uttar Pradesh Scraps 500 MW Solar Auction, Plans to Re-Auction Hoping for Lower Bids". Mercom India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோலேரா_சூரியப்_பூங்கா&oldid=3735098" இலிருந்து மீள்விக்கப்பட்டது