தொழிலாளி
Appearance
இந்தியாவில் தொழிலாளி என்பவர் யார் என்பதை இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் - 1948 ன் பிரிவு 2(L) விளக்குகிறது. இதன்படி, ஒரு நபர், முதலாளியால்]] நேரடியாகவோ அல்லது அவரது முகவரின் மூலமாகவோ, முதலாளிக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமலோ, உற்பத்தி நடைமுறையில் அல்லது உற்பத்திக்கு பயன்படும் இயந்திரங்களைச் சுத்தம் செய்து பராமரிப்பதில் அல்லது உற்பத்திக்கு தொடர்புடைய வேறு எந்தச் செயலிலும் ஈடுபடுத்தப்பட்டால் அந்நபர் தொழிலாளி என அழைக்கப்படுவார். அந்நபருக்கு வழங்கப்படும் கூலி நேரக்கூலியாகவோ, வேலைக்கேற்ற கூலியாகவோ இருந்தாலும் அந்நபர் தொழிலாளி ஆவார். தொழிலாளி என்பது பதினெட்டு வயதைக் கடந்தவர்களை மட்டும் குறிக்க கூடியது.