உள்ளடக்கத்துக்குச் செல்

தொழிற்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிற்சாலை என்பது தொழிலாளர்களாகக் கொண்ட வளாகம் தொழிற்சாலை எனப்படுகிறது. வளாகம் என்பது தொழிற்சாலை இயங்கும் கட்டிடம், அதன் சுற்றுச்சுவர், அதற்குள் இருக்கும் திறந்த காலி இடங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.[1][2][3]

தொழிற்சாலை தொழிற்சாலை என்பது மூலப்பொருட்களையும், முடிவுற்ற பொருட்களையும் உற்பத்தி செடீநுவதாகும். தொழிற்சாலை என்ற சொல்லானது வர்த்தகத் தொடர்பான நடைமுறைக் பணிகளையும், பொருட்களைத் தயாரிப்பதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதேயாகும். ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செடீநுயப்பட்ட பொருட்கள் நேரடியாக இறுதி நுகர்வுக்கு வருமானால் அவை நுகர்வுப் பொருட்கள் எனப்படும். (உ.ம்.) பற்பசை, சோப்பு, தொலைக்காட்சி பெட்டி. ஆனால் மற்றொரு தொழிற்சாலை தயாரிக்கக்கூடிய பொருட்களுக்குத் தேவைப்படும் உதிரி பாகங்களைத் தயாரிக்கும். அதனால், அப்பொருள் மூலதனப் பொருட்கள் எனப்படும். (எ.கா.) இயந்திரங்கள், உதிரிபாகங்கள்.

தொழிற்சாலை வகைகள்

[தொகு]

1. பிரித்தெடுக்கும் தொழிற்சாலை. 2. மரபுத் தொழிற்சாலை 3. கட்டுமானத் தொழிற்சாலை 4. தயாரிப்பு தொழிற்சாலை

1.பிரித்தெடுக்கும் தொழிற்சாலை

[தொகு]

பூமியிலிருந்து தோண்டி எடுக்கும் பொருட்களைத்பிரித்தெடுக்கக் கூடிய தொழிற்சாலைகளுக்குப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்று பெயர். (எ.டு.) வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கப் பணிகள்.

2.மரபுத் தொழிற்சாலை

[தொகு]

நுகர்வோரின் உபயோகத்திற்காக சில தாவரங்களும், மிருகங்களும் வளர்க்கப்படுகின்றன. இவையே மரபுத் தொழிற்சாலை எனப்படுகின்றன. (உ.ம்.) மீன்வளர்ப்பு, கோழிப்பண்ணை, பன்றி வளர்ப்பு.

3.கட்டுமானத் தொழிற்சாலை

[தொகு]

கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், அணைகள் முதலானவற்றைக் கட்டத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கட்டுமானத் தொழிற்சாலை என்று பெயர். இது பிற தொழிற்சாலைகள் தயாரித்து வழங்கும் சிமெண்டு, இரும்பு மற்றும் எஃகு முதலானவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும்.

4.தயாரிப்பு தொழிற்சாலை

[தொகு]

கச்சாப் பொருட்களை அல்லது பாதி முடிவு பெற்றப் பொருட்களை, முடிவுற்ற பொருட்களாக மாற்றக் கூடிய தொழிற்சாலைகளைத் தயாரிப்பு தொழிற்சாலை எனலாம். பருத்தி துணி உற்பத்தி செடீநுயக்கூடிய ஆலை இதற்கு ஒரு உதாரணமாகும். ஏனெனில் கச்சாப்பருத்தியை, நூலிழையாகவும் நூலிழையை நல்ல துணியாகவும் இத்தொழிற்சாலை மாற்றுவதால் இதனைத் தயாரிப்புத் தொழிற்சாலை எனலாம். தயாரிப்பு தொழிற்சாலைகளை மேலும் தொடர் தொழிற்சாலை எனவும், ஒன்று திரட்டும் தொழிற்சாலை எனவும் பிரிக்கலாம்.

தொடர் தொழிற்சாலை

[தொகு]

இவ்விதத் தொழிற்சாலையில் கச்சாப் பொருட்களைத் தொழிற்சாலையின் ஒருமுனையிலிட்டு, பல்வேறு நிலைகளைக் கடந்து முற்றுப் பெற்றப் பொருட்களாக மாற்றுகின்றன. இத்தொழிற்சாலையில் பொருட்கள் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து வருவதால் தொடர் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது. (எ.டு.) ஆடை, காகிதம் மற்றும் சர்க்கரை தயாரிக்கும் தொழிற்சாலைகள்.

ஓன்று திரட்டும் தொழிற்சாலை

[தொகு]

இவ்வித தொழிற்சாலை பல்வேறு பொருட்களைச் சேகரித்து ஒன்றிணைத்து, கடைசி நிலையில் முற்றுப் பெற்றப் பொருட்களாக மாற்றுகின்றன. மோட்டார் வாகனம், மிதிவண்டி, கணிப்பொறி இதற்கு உதாரணங்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Landes, David. S. (1969). The Unbound Prometheus: Technological Change and Industrial Development in Western Europe from 1750 to the Present. Cambridge, New York: Press Syndicate of the University of Cambridge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-09418-6.
  2. Hozdić, Elvis (2015). "Smart Factory for Industry 4.0: A review". International Journal of Modern Manufacturing Technologies 7 (1): 28–35. 
  3. "What Are Industrial Sheds?". Asset Building. Archived from the original on 10 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்சாலை&oldid=4099768" இலிருந்து மீள்விக்கப்பட்டது