தெரசா ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெரசா ஆடு என்பது இந்தியாவைச் சேர்ந்த நிகோபார் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள தெரசா தீவில் இனம் கண்டறியப்பட்ட ஆடு ஆகும். தற்போது இந்த வகை ஆடுகள் தெரசா, பம்பூகா, கார்நிகோபார் , கட்சால் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன. இவை ஊரின் பொது மேய்ச்சல் நிலத்தில் மேயவிட்டு வளர்க்கப்படுகின்றன. மிகவும் வளரும் இந்த தெரசா இன ஆடுகள், பொதுவாக ஆறு மாதத்துக்குள் பருவத்தை எட்டிவிடுகின்றன. இவை ஒருமுறைக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள்வரை ஈனும். வளர்ந்த ஆடு 50 முதல் 60 கிலோ எடையைக் கொண்டிருக்கும். இந்த ஆடுகள் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏ. வேல்முருகன் (1 சூலை 2017). "உப்புத்தண்ணீர் குடித்து வளரும் ஆடுகள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரசா_ஆடு&oldid=3597805" இலிருந்து மீள்விக்கப்பட்டது