திறந்த மூல வன்பொருள்
Appearance
திற மூல வன்பொருள் அல்லது கட்டற்ற வன்பொருள் என்பது கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருட்கள் போன்று அதே உரிமைகளோடு உருவாக்கப்படும் வன்பொருட்கள் அல்லது வன்பொருட்களுக்கான வடிவமைப்புகள் ஆகும். இலத்திரனியல் பலககைகள், வேளாண் இயந்திரங்கள், கருவிகள், தானியங்கிகள் என எல்லாத் தேவைகளுக்காகவும் திற மூல வன்பொருட்கள் உருவாக்கப்படுவது பெருகி வருகிறது. உற்பத்தித் தொழில்நுட்பம் பரந்த முறையில் கிடைக்கத் தொடங்குவது இந்த திற மூல வன்பொருள் இயக்கத்தை உந்தி உள்ளது.