திறந்த-வெளி சிகிச்சை
திறந்த-வெளி சிகிச்சை (Open-air treatment) என்பது புதிய காற்றையும் சூரிய ஒளி வீச்சையும் நோயாற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் சிகிச்சை முறையாகும். ஒரு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தில், காற்றோட்டமான, சூரிய ஒளி வீச்சுள்ள அறையில் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்வதன் மூலம் அல்லது கூடாரங்களில் அல்லது பிற திறந்த வெளி தங்குமிடங்களில் வீட்டு நோயாளிகளுக்கு இச்சிகிச்சை செய்யப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் போது இன்புளுயன்சா காய்ச்சல் அல்லது காசநோய் போன்ற தொற்று சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு இத்தகைய சிகிச்சை பயன்படுத்தப்பட்டது. [2]
1960 ஆம் ஆண்டுகளில், உயிரியல் போரில் ஆராய்ச்சியாளர்கள் எசரிக்கியா கோலை போன்ற நுண்ணுயிரி பாக்டீரியாக்கள் வெளிப்புறக் காற்றில் வெளிப்படும் போது கொல்லப்பட்டதாகக் கண்டறிந்தனர். ஆனால் அவை வெளிப்படாமல் மூடப்பட்டிருக்கும் போது நீண்ட காலத்திற்கு உயிருடனிருக்கும் சாத்தியத்தை கொண்டிருப்பதாக அறிந்தனர்.அவர்கள் இதை திறந்தவெளி காரணி என்று அழைத்தனர். ஆனால் இவற்றை கொல்லும் சரியான வழிமுறை அல்லது கிருமிநாசினி முகவரை இவர்களால் அடையாளம் காண முடியவில்லை. [3]
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவதற்காக பல நாடுகளில் திறந்தவெளி பள்ளிகள் நிறுவப்பட்டன. புதிய காற்று, நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவை இங்கு வலியுறுத்தப்பட்டன. இங்கிலாந்தில் 1907 ஆம் ஆண்டில் போசுட்டல் வுட்டில் முதலாவது திறந்தவெளி பள்ளி திறக்கப்பட்டது, 1930 ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reinhardt, Charles; Thomson, David (1902), A Handbook of the Open-Air Treatment, London: John Bale, Sons & Danielsson
- ↑ Hobday, RA; Cason, JW (2009), "The open-air treatment of pandemic influenza", American Journal of Public Health (99): S236–S242, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2105/AJPH.2008.134627, PMC 4504358
- ↑ Swain, Frank (11 December 2013), "Fresh air and sunshine: The forgotten antibiotics", New Scientist
- ↑ Châtelet, Anne-Marie; Lerch, Dominique; Luc, Jean-Noël (2003), The Open-Air Schools: An Educational and Architectural Experience in the Europe of the Twentieth Century, Paris: Recherches, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782862220444