திருப்புகழ்ப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்புகழ் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் இந்த நூலை இயற்றினார். [2] இது சமண சமய நூல். இங்குள்ள திருப்புகழ் என்னும் சொல் அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழைக் குறிக்காது. அருகனுடைய வழியில் வந்த தீர்த்தங்கரர் ஒருவரின் புகழ் என்பதனைக் குறிக்கும் தொடரே இந் நூலிலுள்ள 'திருப்புகழ்'.

'திரு' என்னும் சொல் சமண நெறியில் [3] சமண மதத்தைக் குறிக்கும். இந்த நூலுக்கு முன்னர் தோன்றிய திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் என்னும் நூலின் பெயர்களால் இதனை அறியலாம்.

திருவறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின் தாமம். [4] [5] [6]
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வுமாம் புராணம் செய்தோன். [7] [8]

என்பன இந் நூலில் வரும் தொடர்ச்செய்திகள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 80. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. திருந்திய கமல ஊர்தி திருப்புகழ் புராணம் செய்தோன் - என இவர் குறிப்பிடப்படுகுறார்.
  3. சம்பிரதாயத்தில்
  4. பாடல் 66
  5. திருவறம் என்பது சமணர் நோன்பு
  6. சமண நோன்பைக் கடைப்பிடிக்காதவர் சூளையில் தீயும் மண்பானைக்கு இட்ட மாலை போல் ஆவர்
  7. இங்குக் குறிக்கப்பட்ட புராணம் ஸ்ரீபுராணம் போலும் என்பது இரா. இராகவையங்கார் கருத்து
  8. ஸ்ரீபுராணம் செய்த புலவர் வடமொழியிலும் தென்மொழியிலும் புலமை மிக்கவர். திருப்புகழ்ப் புராணம் பாடிய மண்டலபுருடர் தமிழில் மட்டுமே புலமை உள்ளவர். எனவே ஐயங்கார் கருத்து பொருந்தாது என்பது மு. அருணாசலம் குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புகழ்ப்_புராணம்&oldid=1435880" இலிருந்து மீள்விக்கப்பட்டது