திரியாங்கம் (கருநாடக இசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரியாங்கம் எனப்படுபவை தாளத்தின் மூன்று அங்கங்கள் (உறுப்புக்கள்) ஆகும். அவையாவன:

  1. லகு
  2. துருதம்
  3. அனுதுருதம்

லகு[தொகு]

  • ஒரு தட்டு தட்டி சின்ன விரலிலிருந்து ஒழுங்காக எண்ணுதல் லகு ஆகும்.
  • இதன் அடையாளம் | ஆகும்.
  • இது கணை எனப்படும்.
  • சாதாரண லகு என சொல்லும் போது 4 அட்சரங்களைக் கொண்ட சதுஸ்ர லகுவையே குறிக்கிறது.
  • லகு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம்[1] என 5 வகைப் படும்.

துருதம்[தொகு]

  • ஒரு முறை தட்டி வீசுதல் துருதம் ஆகும்.
  • இதன் அடையாளம் O ஆகும்.
  • இது மதி என்றழைக்கப்படும்.

அனுதுருதம்[தொகு]

  • கையினால் ஒரு தட்டு தட்டினால் அது அனுதுருதம் எனப்படும்.
  • இதன் அடையாளம் U ஆகும்.
  • இது பிறை, துடி என்றழைக்கப்படும்.
  • எல்லா அங்கங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையது.

மேற்கோள்கள்[தொகு]