தினேஷ் சந்திர சின்ஹா
தினேஷ் சந்திர சின்ஹா | |
---|---|
தினேஷ் சந்திர சின்ஹா | |
பிறப்பு | 1935 நவகாளி, வங்காளம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 16 ஜூன் 2014 பட்டாநகர், கொல்கத்தா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நாட்டுப்புறவியலாளர், வரலாற்றாசிரியர் |
தினேஷ் சந்திர சின்ஹா (Dinesh Chandra Sinha ) ஒரு இந்திய அறிஞர், கல்வியாளர், நாட்டுப்புறவியலாளர், வரலாற்றாசிரியர் ஆவார். கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த கவிகன் எனும் நிகழ்த்துக்கலையை ஆராய்ச்சி செய்ததன் மூலம் அறியப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]சின்ஹா 1935ம் ஆண்டு, பிரிவினைக்கு முந்தைய வங்காளத்தில் (இன்றைய பங்களாதேஷ் ) நவகாளி மாவட்டத்தில் சிந்துர்கைட் –பாபுபூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். சின்ஹா தனது 11 வது வயதில் நவகாளி இனப்படுகொலையால் பாதிப்படைந்து தனது பூர்வீக வீட்டை விட்டு குடும்பத்துடன் நவகாளியை விட்டு தப்பிச்சென்றார். வங்கப் பிரிவினைக்குப் பின்னர் கொல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தார்.
குடும்பம் மற்றும் பிற்கால வாழ்க்கை
[தொகு]சின்ஹாவிற்கு உடன்பிறந்தோர் 3 தம்பிகள் மற்றும் ஒரு தங்கை ஆவர். குழந்தைப்பருவத்திலேயே இவரது ஒரு தம்பியும் ஒரு தங்கையும் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். சின்ஹாவின் தந்தை உடல்நலக்குறைவால் 1942-ஆம் ஆண்டில் மரணமடைந்தார். நவகாளியிலிருந்து புலம் பெயர்ந்த பிறகு சின்ஹாவின் குடும்பத்தினர் பட்டாநகரில் குடியேறினர். சின்ஹா திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டார் 1989 -ஆம் ஆண்டு சின்ஹாவின் அன்னை மரணமடைந்தார். 2006-ஆம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.[1]
இறப்பு
[தொகு]2014-ஆம் ஆண்டு ஜனவரியில் இவரது தம்பிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானர். இவரது தம்பி மாரடைப்பிலிருந்து மீண்டபிறகும் இவரால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத காரணத்தால் சின்ஹாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. 2014ம் ஆண்டு மே மாதம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பணி
[தொகு]சின்ஹா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்தபோது, தனது படிப்பையும் ஆராய்ச்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். சர் அசுதோஷ் தங்கப் பதக்கம், சரோஜினி பாசு தங்கப் பதக்கம் மற்றும் கிரிஃபித் நினைவு பரிசு ஆகியவை பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சி செய்ததற்காக அவருக்கு வழங்கப்பட்டது. இவர் 1995 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
விருதுகள்
[தொகு]சர் அசுதோஷ் தங்கப் பதக்கம்
சரோஜினி பாசு தங்கப் பதக்கம்
கிரிஃபித் நினைவு பரிசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "University Publications A". University of Calcutta. Archived from the original on 5 August 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.