உள்ளடக்கத்துக்குச் செல்

தி புக் ஆஃப் தி டச்சஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

“தி புக் ஆஃப் தி டச்சஸ்” என்ற நீண்ட கவிதை ஜியோஃப்ரே சாசரால் 1368 மற்றும் 1372 க்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது, இக்கவிதை ‘ தி ட்ரெம் ஆஃப் சாஸர்’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘அன் எபிசி’ என்ற சாஸரின் சிறிய கவிதைக்குப் பின்னர் ‘தி புக் ஆஃப் தி டச்சஸ்’ அல்லது ‘தி டெத் ஆஃப் ப்ளான்ச்’’ என்று அறியப்படுகின்ற நீண்ட கவிதை எழுதப்பட்டது. இக்கவிதை ஜாண் ஆஃப் காண்ட் அவர்களது மனைவி ப்ளான்ச் ஆஃப் லான்ஸஸ்டரின் மரணத்தின் நினைவாக எழுதப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்ற்ன.

கதை சுருக்கம்

கவிதையின் தொடக்கத்தில், தூக்கமில்லாத கவிஞர் தனது படுக்கையில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறார். அக்கதை பழைய கதை தொகுப்புகளான செயக்ஸ் மற்றும் அல்சியோனின் கற்பனைக் கதைப் பற்றியது. கதை நாயகனான செயக்ஸ் சாகச கடற்பயணத்தின்போது உயிர் துறக்க நேரிடுகிற்து, அவனை பிரிந்த அல்சியோன் பிரிவை எண்ணி மிகவும் வாடி வேதனையடைகிறாள். செயக்ஸ்க்கு என்ன ஆனதோ என்று எண்ணி பெண் கடவுளான ஜீனோவிடம் வேண்டுகிறாள். செயக்ஸின் நிலை தெரிந்தால் தன்னையே முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன் என்று வேண்டுகிறாள். உடனே ஜீனோ அல்சியோனுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரச்செய்து, தூக்கத்தின் கடவுளான மார்ஃபியஸை அழைத்து செயக்ஸின் நிலையை தெரிந்து வர கூறுகிறார். அல்சியோனின் கனவில் செயக்ஸ் கடலில் மூழ்கி இறக்க நேரிட்டது தெரிய வருகிறது. பின்னர் துக்கம் தாளாமல் மூன்று நாட்களுக்கு பின் இறக்கிறாள். அதன் பின் கவிஞர் கடவுளிடம் தனக்கும் அல்சியோனைப் போன்று தூங்க செய்தால், மிகவும் ஆடம்பரமான, உலகின் தலை சிறந்த தங்க மஞ்சத்தை பரிசாக வழங்குவேன் என்று கூறுகிறார். அதன் பின்னர் கவிஞருக்கு ஒரு கனவு தோன்றுகிறது. அவர் கண்விழிக்கும் பொழுது ‘தி ரொமான்ஸ் ஆஃப் தி ரோஸ்’ கதையில் குறிப்பிட்டது போன்ற ‘டேல் ஆஃப் ட்ராய்’ சம்பவங்கள் சித்தரிக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல் அவ்வறையில் உள்ளதைக் காண்கிறார். அப்பொழுது ஒரு வேட்டையாடும் சப்தம் கேட்டு அறையை விட்டு வெளியேறுகிறார். வேட்டையாடுவது ‘ஆக்டேவியன்’ என்று அவருக்கு தெரியவருகிறது. நாய்கள் கட்டவிழ்க்கப்பட்டு வேட்டை தொடங்குகிறது. ஒரு சிறிய நாய்குட்டியை தொடர்ந்து கவிஞர் காட்டினுள் செல்கிறார். அப்பொழுது ஒரு போர் வீரன் கருப்புநிற உடையணிந்து தனது இறந்த இராணியை நினைத்து இரங்கற்பா இயற்றிக்கொண்டிருக்கிறார். கவிஞர் அப்போர்வீரனிடம் நிகழ்ந்தவற்றை விசாரிக்கிறார். அதற்கு அப்போர் வீரன் தனக்கு நிகழ்ந்தவற்றைக் கூறுகிறார். ‘ஃபார்சுனா’ என்பவரிடம் சதுரங்கம் விளையாடி தோற்று தனது மனைவியை இழந்ததாக கூறுகிறார். இதனை உண்மையாக புரிந்து கொள்ளாத கவிஞர் சதுரங்க தோல்விக்காக கலங்க வேண்டாம் என்று கூறுகிறார். அப்போர்வீரன் தனது வாழ்க்கை கதையை எடுத்துக் கூறுகிறார், தனது வாழ்க்கை முழுவதையும் ‘காதல்’க்காக அர்பணித்ததாகவும் ஒரு பெண் தனது மனத்தை கவர்ந்ததாக கூறுகிறார். போர்வீரன் தனது காதலியின் அழகை வர்ணித்து அவரது பெயர் ‘குட் ஃபர் ஓயிட்’ என்று கூறுகிறார். அதுவரை கேட்டுக்கொன்டிருந்த கவிஞர் உருவக சதுரங்க விடையாட்டை புரிந்து கொள்ளாமல் அக்கருப்பு போர்வீரனிடம் கதையை நிறுத்திக்கொண்டு அவர் எதை இழந்தார் என்று வினவுகிறார். மீண்டுமாக அப்போர்வீரன் தனது காதலியின் இசைவுக்காக பல காலம் காத்திருந்ததாகவும் ஒன்றாக பல காலம் வாழ்ந்ததாகவும் தரிவிக்கிறாh;. இதைப்புரிந்து கொள்ளாத கவிஞர் போர்வீரனின் காதலி ‘ஒயிட்’ எங்கே என்று பொறுமை இழந்து வினவுகிறார். இறுதியாக போர்வீரன் தனது காதலி ‘ஒயிட்’ இறந்துவிட்டதாக கூறுகிறார். வேட்டை முடிவடையும் போது உண்மையை புரிந்து கொண்ட கவிஞர் தன் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டவாறு கண் விழித்துப் பார்க்கிறார். தனது கனவு அருமையாக இருந்ததாகவும் அதனை உடனே பாடல் வரிகளில் எழுத வேண்டுமென்று முடிவு செய்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

1. The Life of Geoffrey Chaucer, Encyclopædia Britannica, 1910. Accessed 11 March 2008. 2. Davis, Norman, et al. A Chaucer Glossary. New York: Oxford, 1979. 3. Foster, Michael. "On Dating the Duchess: The Personal and Social Context of Book of the Duchess." Review of English Studies 59 (Fall 2008): 185–196

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_புக்_ஆஃப்_தி_டச்சஸ்&oldid=3523834" இலிருந்து மீள்விக்கப்பட்டது