தமிழில் பேசுதல் (விளையாட்டு)
Appearance
தமிழில் பேசுதல் என்பது ஒரு மொழி விளையாட்டு ஆகும். பிற மொழிகளைக் கலக்காமல், வேகமாக தமிழில் உரையாடுவதே இந்த விளையாட்டின் அடிப்படை. சில இடங்களில் ஆம், இல்லை என்று கூற முடியாது, ஒரே பதிலை அல்லது சொல்லை மூன்று முறை பயன்படுத்த முடியாது போன்ற விதிகளும் இருக்கும். ஒருவர் கேள்வி கேப்பவராகவும், மற்றவர் பதில் கூறுபவராகவும் இந்த விளையாட்டு அமையும். பதிலளிப்பவர் விதிகளுக்கு கட்டுப்பட்டு 3 நிமிடங்கள், அல்லது அதற்கு மேல் உரையாடினால் அவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்.