உள்ளடக்கத்துக்குச் செல்

தட்சிணாமூர்த்தி சிற்பம் (பூதவராயர் குளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தட்சிணாமூர்த்தி சிற்பம் (பூதராயர் குளம்), நல்லூரில், தற்போது சட்டநாதர் சிவன் கோயில் அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் உள்ள பூதராயர் குளத்தை ஆழமாக்கும் முயற்சியின்போது 1957ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட பல சிலைகளுள் ஒன்று. இது 10-12ம் நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த சோழர் கலைப்பாணியில் அமைந்த சிற்பமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[1] யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏதோவொரு கோயிலில் இருந்த இச்சிலையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாப்பதற்காக இவ்விடத்தில் புதைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது இப்போது யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிருஷ்ணராஜா, செல்லையா., 2015, பக். 153

உசாத்துணைகள்

[தொகு]
  • கிருஷ்ணராஜா, செல்லையா., சிற்பக்கலைமரபுகள் மற்றும் குளங்களின் பெயர்களினூடாக அறியப்படும் நல்லூரின் பண்பாடு, சிங்கை ஆரம் பிரதேச மலர், நல்லூர்ப் பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை, நல்லூர், 2015.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]