டேவிட் குடால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேவிட் வில்லியம் குடால் ( David William Goodall 4 எப்பிரல் 1914 – 10 மே 2018 ) என்பவர் பிரித்தானியாவில் பிறந்த ஆத்திரேலிய வாழ் உயிரியல் அறிவியலாளர் ஆவார். சுற்றுப்புறவியலின் புள்ளி விவரங்கள் மற்றும் மரம் செடி கொடி பற்றிய ஆய்வு செய்தவர்.[1][2]

பிறப்பு, படிப்பு, பணிகள்[தொகு]

டேவிட் குடால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியலில் பட்டம் பெற்றார். தக்காளிச் செடி பற்றிய ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றார். இக்கால கட்டத்தில் அவரால் இரண்டாம் போரில் கலந்து கொள்ள முடியவில்லை.[3] 1948 இல் ஆத்திரேலியாவுக்குச் சென்று குடியேறினார். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணி செய்தார். 1952 முதல் 1954 வரை கோல்ட் கோஸ்த் பல்கலைக்கழகத்தில் பயிரியல் துறை ஆசிரியராகப் பணி புரிந்தார். 1953 இல் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார்.

அக வாழ்க்கை[தொகு]

குடால் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.நான்கு குழந்தைகளும் 12 பெயரக் குழந்தைகளும் இவருக்கு உண்டு.தமது மரபியல் தம்மை இத்தனை ஆண்டுகள் வாழ வைத்தது என்றும் உ யிரோடு வாழ செயலூக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.[4] தமது 90 அகவை வரை டென்னிஸ் விளையாடினார்.கவிஞராகவும் நடிகராகவும் இருந்தார்.[5][6]

இறுதிக்காலம்[தொகு]

நூற்று நான்கு ஆண்டுகள் வாழ்ந்த டேவிட் குடால், சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டின் இசைவைப் பெற்று, ஆங்கு சென்று, ஒரு மருத்துவமனையில் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டார். இந்தச் செய்தி அறிவு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.[7]

உசாத்துணை[தொகு]

  1. "Australia's oldest working scientist wins battle over office". bbc.co.uk. London: BBC News. 2016. Archived from the original on 21 திசம்பர் 2016.
  2. "Professor David Goodall". ecu.edu.au. Edith Cowan University. 2016. Archived from the original on 21 திசம்பர் 2016.
  3. Gartry, Laura (10 May 2017). "David Goodall: Australia's oldest working scientist fights to stay at university". ABC.
  4. AFP (May 10, 2018). "David Goodall gives last press conference before euthanasia" (in en). The Australian. https://www.theaustralian.com.au/news/david-goodall-gives-last-press-conference-before-euthanasia/news-story/42158936c0ccbc75a6d0e416349de113?nk=41d054007c8c623c85c8fe0ecfbd1d56-1526342613. 
  5. Hamlyn, Charlotte (3 April 2018). "Academic David Goodall turns 104 and his birthday wish is to die in peace". ABC News. http://www.abc.net.au/news/2018-04-04/david-goodall-is-104-but-takes-no-pleasure-in-getting-older/9614344. 
  6. Scheuber, Andrew (10 May 2018). "David Goodall – tributes to 104 year old botanist and alumnus". Imperial News. Imperial College London.
  7. http://www.thehindu.com/news/international/at-104-australias-oldest-scientist-heads-to-switzerland-to-end-life/article23757128
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_குடால்&oldid=3759519" இலிருந்து மீள்விக்கப்பட்டது