டின்டால் விளைவு
Appearance
டின்டால் விளைவு (Tyndall effect) என்பது கூழ்ம நிலையிலுள்ள பொருட்களின் வழியாகப் பாயும் ஒளிக்கதிர்களை அவற்றிலுள்ள கூழ்மத்துகள்கள் (colloidal particles) சிதறடிப்பதைக் குறிப்பதாகும். இவ்வாறு ஒளிச்சிதறடிக்கப்படுவதால் ஊடுருவும் ஒளிக்கதிரின் பாதைப் புலனாகிறது. இவ்விளைவு இதைக் கண்டுபிடித்த அயர்லாந்து அறிவியலர் இஞ்சான் டின்டால் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வண்டிகளிலுள்ள முன்விளக்குகளின் ஒளி சிதறுவது இவ்விளைவினாலே ஆகும்.
புவியின் காற்று மண்டலமும் ஒரு கூழ்மக் கலவையே. இதன் காரணமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட கதிர்களே கூடுதலாக சிதறடிக்கப் படுகின்றன. இதன் காரணமாகவே வானம் நீல நிறமாகத் தென்படுகின்றது.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Helmenstine, Anne Marie (February 3, 2020). "Tyndall Effect Definition and Examples". ThoughtCo (in ஆங்கிலம்).
- ↑ Reported in a 10-page biography of Tyndall by Arthur Whitmore Smith, a professor of physics, writing in an American scientific monthly in 1920; available online.
- ↑ "John Tyndall's blue sky apparatus". Royal Institution (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-08.