உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெசிக்கா மிங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெசிகா மிங்க் (Jessica Mink) (முன்னர் டக்ளஸ் ஜான் மிங்க்[1]) ஓர் அமெரிக்க மென்பொருள் உருவாக்குநரும் ஆர்வர்டு, சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் தரவுக் காப்பகவியலாளரும் ஆவார். யுரேனசு கோளைச் சுற்றியுள்ள வளையங்களைக் கண்டுபிடித்த குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.[2]

இளமையும் தொழிலும்

[தொகு]

இவர் 1951 ஆம் ஆண்டில் இலிங்கன் நெப்ராசுக்காவில் பிறந்தார். 1969 ஆம் ஆண்டில் டண்டி சமூக உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார்.[3] 1973 ஆம் ஆண்டில் மாசசூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் கோள் அறிவியலில் இளம் அரிவியல். பட்டமும் (1973) மூதறிவியல். பட்டமும் (1974) பெற்றார். 1976 முதல் 1979 வரை கார்னெல் பல்கலைக்கழகத்தில் வானியல் மென்பொருள் உருவாக்குநராக பணியாற்றினார்.[4] இந்த நேரத்தில்தான் யுரேனசைச் சுற்றியுள்ள வளையங்களைக் கண்டுபிடித்த குழுவில் இவர் இருந்தார்.[5] குழுவிற்குள் தரவுக் குறைப்பு மென்பொருள், தரவுப் பகுப்பாய்விற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.[6] கார்னலில் பணிபுரிந்த பிறகு அவர் மீண்டும் மசாச்சூசட்சு தொழில்நுட்ப நிறுவனத்துக்குக் குடிபெயர்ந்தார் , அங்கு அவர் நெப்டியூனின் வளையங்களைக் கண்டுபிடிப்பதில் பங்களித்தார்.[7] இவர் WCSகருவிகள்,RVSAO உள்ளிட்ட வானியற்பியலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல மென்பொருள் தொகுப்புகளை எழுதியுள்ளார்.[6][8]

முனைவர் பட்டம் இல்லாத போதிலும் இவர் அமெரிக்க வானியல் கழகத்திலும் பன்னாட்டு வானியல் ஒன்றியத்திலும் உறுப்பினராக உள்ளார்.[9]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் ஒரு முனைப்பான மிதிவண்டி பயனர்.[10] மாசசூசெட்சு மிதிவண்டிக் கூட்டணியின் அதிகாரியாகவும் இயக்குநராகவும் பணியாற்றிய அவர் , 1991 முதல் கிழக்கு கடற்கரை பசுமைவழியின் மாசசூசெட்டசுப் பகுதியின் சாலைத் திட்டமிடுபவராகவும் இருந்து வருகிறார்.[11]

இவர் ஒரு திருநங்கை பெண் , அவர் 2011 ஆம் ஆண்டில் தனது 60 வயதில் உலகுக்கு வெளிப்படுத்தினார்.[12] அதன்பிறகு அவர் தனது பாலியல் மாற்றப் பட்டறிவுகளைப் பற்றி பேசியுள்ளார்.[13] தொழில்முறைச் சூழலில் பாலியல் மாற்றத்தின் பட்டறிவுகளைப் பற்றிய இரண்டு கட்டுரைகளிலும் அவர் இடம்பெற்றார்.[12][14] வாண்டர்பில்ட்டு பல்கலைக்கழகத்தில் 2015 உள்ளடக்கிய வானியல் மாநாட்டின் இணை அமைப்பாளராக இவர் இருந்தார்.[15]

இவர் தற்போது மாசசூசெட்ஸில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Doug to Jessica". பார்க்கப்பட்ட நாள் 2012-12-04.
  2. Elliot, J.L.; E. Dunham; D. Mink (1977). "The Rings of Uranus". Nature 267 (5609): 328–330. doi:10.1038/267328a0. Bibcode: 1977Natur.267..328E. 
  3. Who's Who in Frontier Science and Technology. 1st ed. 1984-1985. Chicago 1984, p. 512
  4. "Jessica D. Mink". tdc-www.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  5. "40 years of Uranus's rings | BBC Sky at Night Magazine". www.skyatnightmagazine.com. Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  6. 6.0 6.1 Richey, Christina (2016-08-16). "Women In Astronomy: Meet Your CSWA: Jessica Mink". Women In Astronomy. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  7. "Women in Atmospheric Sciences Luncheon". 2018 AMS Annual Meeting (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  8. "IMWCS Image World Coordinate Setting Utility". tdc-www.harvard.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  9. "WGLE interviews: Jessica Mink | SGMA". sgma.aas.org. Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  10. O’Connor, Brion. "Still on a bike in winter weather". edition.pagesuite.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  11. "Jessica Mink, MassPaths Webmistress". March 11, 2012. பார்க்கப்பட்ட நாள் 16 May 2013.
  12. 12.0 12.1 "Managing Your Professional Identity During a Gender Change". https://hbr.org/2015/02/managing-your-professional-identity-during-a-gender-change. பார்த்த நாள்: 2019-02-25. 
  13. Kirkpatrick, Jessica (2014-12-16). "Women In Astronomy: On Being a Transgender Astronomer". Women In Astronomy. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  14. "What to Do When Your Colleague Comes Out as Transgender". https://hbr.org/2015/02/what-to-do-when-your-colleague-comes-out-as-transgender. பார்த்த நாள்: 2019-02-25. 
  15. "Inclusive Astronomy Conference Confronts Diversity Issues". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசிக்கா_மிங்க்&oldid=4109359" இலிருந்து மீள்விக்கப்பட்டது