உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிசொப்பி மாசினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிசொப்பி மாசினி

ஜிசொப்பி மாசினி (Giuseppe Mazzini 22 சூன் 1805–10 மார்ச்சு 1872) என்பவர் இத்தாலிய அரசியலாளர், இதழாளர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார். இத்தாலி ஒற்றுமையுடன் இருப்பதற்கும் உரிமை பெறுவதற்கும் பாடுபட்டவர்.[1]

இவர் புரட்சியாளராக இருந்து இளம் இத்தாலி என்னும் இரகசிய அமைப்பை 1832 ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். இந்த அமைப்பு இத்தாலி ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது.[2]

இளமைக் காலம்

[தொகு]

சிசோப்பி மாசினியின் தந்தை ஒரு மருத்துவர். தமது 14 ஆம் அகவையில் மாசினி ஜெனோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1827 இல் சட்டம் படித்துப் பட்டம் பெற்றார். ஏழைகளின் வழக்கறிஞர் என அவர் விளங்கினார். நாடகம் புதினம் இவற்றில் நாட்டம் இருந்த போதிலும் அவருக்கு இருந்த நாட்டுப் பற்றின் காரணமாகப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். கார்பொனேரி என்ற ஒரு புரட்சி இயக்கத்தில் சேர்ந்து அப்போது அங்கு இருந்த அரசை அகற்றும் செயல்களில் இறங்கினார். 1830 இல் இவர் தளை செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டார்.

அரசியல் போராட்டப் பணிகள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "The Italian Unification". Archived from the original on 2017-12-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  2. https://www.britannica.com/biography/Giuseppe-Mazzini
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசொப்பி_மாசினி&oldid=3573138" இலிருந்து மீள்விக்கப்பட்டது