உள்ளடக்கத்துக்குச் செல்

செங் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங் சுழற்சி (Cheng cycle) என்பது வாயு விசையாழி சுழற்சியின் ஒரு மறுசீரமைப்பு சுழற்சியாகும். செங் சுழற்சியில் விசையாழியில் இருந்து வெளியேறும் வாயு வெப்ப மீட்பு நீராவி மின்னாக்கியில் நீராவி தயாரிக்கப் பயன்படுகிறது ref>Penning, F. M. and de Lange, F. M. (1995) Steam Injection: analysis of a typical application Applied Thermal Engineering Vol. 16, No. 2, pp. 115 125</ref>. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவி மின் உற்பத்தியை அதிகரிக்க எரிவாயு விசையாழியின் எரிப்பு அறைக்குள் செலுத்தப்படுகிறது [1]. வாயுச்சுழலியின் பிரெய்ட்டன் சுழற்சி மற்றும் நீராவிச் சுழலியின் ரேங்கின் சுழற்சி ஆகியனவற்றின் இணை சேர்க்கையாகவே இச்செயல்பாடு கருதப்படுகிறது. [2][3] இச்சுழற்சியை சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஒய்.செங் கண்டுபிடித்தார். 1976 இல் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார் [4][5].

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. De Paepe, M. and E. Dick (2001) Technological and economical analysis of water recovery in steam injected gas turbines, Applied Thermal Engineering, Volume 21, Issue 2, January 2001, Pages 135–156
  2. Stadler, F. and U. Schneider, (1997) ELIN Cheng Cycle, Elin Energieversorgung GmbH, 1997
  3. Motz, D.A. (1987) The Cheng Cycle: principles and applications, Ass. Energy Engng, 8th World Energy Engng Conf., Atlanta, USA
  4. Cen, Ke-fa Yong Chi, Jianhua Yan (2007) Challenges of Power Engineering and Environment: Proceedings of the International Conference on Power Engineering, Springer (Accessed August 2012)
  5. Cheng, D.Y. and A.L.C. Nelson (2002) Chronological development of the cheng cycle steam injected gas turbine during the past 25 years. in: Anon (Ed.), Proceedings of ASME Turbo Expo 2002, Amsterdam, ASME Paper No. GT-2002-30119 (2002), pp. 421–428
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்_சுழற்சி&oldid=2958185" இலிருந்து மீள்விக்கப்பட்டது