உள்ளடக்கத்துக்குச் செல்

சூயெசுக் கால்வாய்ப் பாலம்

ஆள்கூறுகள்: 30°49′42″N 32°19′03″E / 30.828248°N 32.317572°E / 30.828248; 32.317572
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முபாரக் அமைதிப் பாலம்
ஆள்கூற்று30°49′42″N 32°19′03″E / 30.828248°N 32.317572°E / 30.828248; 32.317572
வாகன வகை/வழிகள்vehicular traffic[1]
கடப்பதுசூயெசுக் கால்வாய்
இடம்எல் கண்டாரா, எகிப்து
Owner
  • சாலைகள், பாலங்கள், போக்குவரத்துக்கான பொது ஆணையம்
  • போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு
[1]
பராமரிப்புசாலைகள், பாலங்கள், போக்குவரத்துக்கான பொது ஆணையம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு
Characteristics
வடிவமைப்புகம்பிவடத்தால் தாங்கப்பட்ட பால அமைப்பு, H-தூண், பொட்கிளாய்[1]
கட்டுமான பொருள்எஃகும் வலிதாக்கிய காங்கிறீட்டும்[1]
மொத்த நீளம்3.9 km (2.4 mi)[1]
அகலம்10 m (33 அடி)[1]
உயரம்pylons: 154 m (505 அடி)[1]
அதிகூடிய தாவகலம்404 m (1,325 அடி)[1]
கீழ்மட்டம்70 m (230 அடி)[1]
History
வடிவமைத்தவர்கசிமா
Constructed byபின்வருவோரைக் கொண்ட கூட்டிணைவு: [2]
கட்டத் தொடங்கிய நாள்1995
திறக்கப்பட்ட நாள்அக்டோபர் 9, 2001
சூயெசுக் கால்வாய்ப் பாலம் is located in Egypt
சூயெசுக் கால்வாய்ப் பாலம்

முபாரக் அமைதிப் பாலம் எனப்படும் சூயெசுக் கால்வாய்ப் பாலம் எல் கண்டாராவில் சூயெசுக் கால்வாயைக் கடக்கும் ஒரு சாலைப் பாலம். இது எகிப்து-சப்பான் நட்புறவுப் பாலம், அல் சலாம் பாலம், அல் சலாம் அமைதிப் பாலம் போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இப்பாலம் ஆப்பிரிக்காக் கண்டத்தை யூரேசியாவுடன் இணைக்கிறது.

வடிவமைப்பும் கட்டுமானமும்

[தொகு]

இப்பாலம் சப்பான் அரசின் உதவியுடன் கட்டப்பட்டது. இதன் தலைமை ஒப்பந்த நிறுவனம், கசீமா கார்ப்பரெசன்.[1] [2] 60% கட்டுமானச் செலவை (13.5 பில்லியன் யென்) சப்பான் அரசு பொறுப்பேற்றது. 1995ல் சனாதிபதி முபாரக் சப்பானுக்குச் சென்றிருந்தபோது, சினாய்த் தீவக்குறையின் வளர்ச்சிக்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி குறித்த உடன்பாடு ஏற்பட்டது. எகிப்து எஞ்சிய 40% செலவைப் (9 பில்லியன் யென்) பொறுப்பேற்றது. பாலம் 2001 அக்டோபரில் திறந்துவைக்கப்பட்டது.

கால்வாய்க்கு மேல் 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் இப்பாலம், 3.9 கிலோ மீட்டர் (2.4 மைல்) நீளமானது. இது 400 மீட்டர் நீளமானதும், கம்பி வடங்களினால் தாங்கப்படுவதுமான முதன்மை அகல்வையும், இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொன்றும் 1.8 கிமீ (1.1 மைல்) நீளமான அணுகு அகல்வுகளையும் கொண்டது. முதன்மை அகல்வைத் தாங்கும் தூண்கள் 154 மீ (505 அடி) உயரமானவை.

கால்வாய் நீர்மட்டத்துக்கு மேல் இதன் உயரம் 70 மீட்டர்கள் என்பதால், நீர் மட்டத்தில் இருந்து ஆகக் கூடிய உயரம் 68 மீட்டர்களாக உடைய கப்பல்கள் மட்டுமே சூயெசுக் கால்வாய் ஊடாகச் செல்ல முடியும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Suez Canal Bridge at Structurae
  2. 2.0 2.1 "Kajima's Spectacular Suez Canal Bridge Project" (PDF). Kajima. Archived from the original (PDF) on மார்ச் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் March 16, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Art. 52 Rules of Navigation