சுழல்களும் நிலைத்த புள்ளிகளும்
கணிதத்தில் S என்ற முடிவுறு கணத்தின் மீதான வரிசைமாற்றம் π எனில் அவ்வரிசைமாற்றத்தின் சுழல்கள் (cycles) என்பவை, S இன் மீது செயற்படும் வரிசைமாற்றம் π இன் செயற்பாட்டால் உருவாகும் உட்குலங்களின் சுற்றுப்பாதைகளுக்கு (orbit) இருவழியொத்தவையாக அமைவன ஆகும். இந்த சுற்றுப்பாதைகள் S இன் உட்கணங்களாக அமையும்.
{ c1, ..., cl } ஒரு சுற்றுப்பாதை எனில்:
- π(ci) = ci + 1, i = 1, ..., l − 1, மற்றும் π(cl) = c1.
இந்த சுற்றுப்பாதைக்குரிய π இன் சுழல் ( c1 c2 ... cn ) என எழுதப்படுகிறது. c1 ஆக சுற்றுப்பாதையின் எந்தவொரு உறுப்பும் எடுத்துக்கொள்ளப்படலாம் என்பதால், இம்முறையில் எழுதுவது தனித்தவொரு முறையாகா இருக்காது.
ஒரு சுற்றுப்பாதையின் அளவு l எனில் அதுவே, அச்சுற்றுப்பாதையின் சுழலின் நீளம் ஆகும். l = 1 எனில் சுற்றுப்பாதையில் ஒரேயொரு உறுப்பு மட்டுமேயிருக்கும்; அந்த உறுப்பு வரிசைமாற்றத்தின் நிலைத்த புள்ளி எனப்படும்.
ஏதாவது ஒரு வரிசைப்படி ஒரு வரிசைமாற்றத்தின் சுழல்களை அடுத்தடுத்து எழுதுவதன் மூலம் அவ்வரிசைமாற்றம் குறிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
இதில் 1 ----> 2, 2---->4, 4---->3, 3---->1; 6 ----> 8, 5---->5, 7--->7. எனவே இவ்வரிசைமாற்றத்தைப் பின்வரும் விதங்களில் எழுதலாம்.
- π = ( 1 2 4 3 ) ( 5 ) ( 6 8 ) (7) = (7) ( 1 2 4 3 ) ( 6 8 ) ( 5 ) = ( 4 3 1 2 ) ( 8 6 ) ( 5 ) (7) = ...
இதில் π(5)=5, π(7)=7 என்பதால் 5, 7 இரண்டும் π இன் நிலைத்த புள்ளிகள். ஒரு வரிசைமாற்றத்தின் நிலைத்தபுள்ளிகளை அதாவது 1 நீளமுள்ள சுழலைக் குறிக்கவேண்டியது அவசியமில்லை[1] என்பதால் வரிசைமாற்றத்தினை எழுதும் சரியானமுறை:
- π = (1 2 4 3)(6 8)
விளக்கம்
[தொகு]S = {a_1, a_2, ..., a_n} என்று கொள்வோம். இதனுடைய வரிசைமாற்றம் ஒவ்வொன்றும் என்ற இருவழிக்கோப்பு. இதை சுழல்முறையில் குறிகாட்ட, ஏதாவது ஒரு உறுப்பிலிருந்து தொடங்கலாம். a_1 இலிருந்து தொடங்கினால் அது க்குப்போகிறது. இது = க்குப்போகிறது. ஆக,
- .
இங்கு இந்தச்சுழலின் நீளம் k_1.
இவைகள் n உறுப்புகளையும் கொண்டுவிட்டால், இத்திரிபில் மொத்தமே ஒரு சுழல்தான். இல்லாவிட்டால், இவைகளில் இல்லாத ஒரு உறுப்பிலிருந்து தொடங்கி மேற்படி செயல்பாட்டைத் திரும்பச்செய்ய வேண்டும். எல்லாஉறுப்புகளும் சுழல்களுக்குள் வரும் வரையில் இதையே தொடர்ந்து செய்தால், கடைசியில் கீழுள்ளபடி ஒரு சுழற்பிரிவு கிடைக்கும்:
- நீளம் 1 உள்ள சுழல்கள்,
- நீளம் 2 உள்ள சுழல்கள்,
- ... ...
- நீளம் k உள்ள சுழல்கள்.
எனவே இந்த வரிசைமாற்றத்தின் சுழலமைப்புக் குறியீடு:
- =
- ஆக இருக்கும்.
இந்த சுழலமைப்பிலுள்ள வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை (தேற்றத்தின்படி):
எடுத்துக்காட்டு:
- .
இதன்
- சுழல்முறைக்குறியீடு: (1 4 5)(2 9)(3 6)(7)(8) = (1 4 5)(2 9)(3 6)
- சுழலமைப்பு: 32211 அல்லது
இந்த சுழலமைப்பிலுள்ள எல்லா வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை = = 7,560.
சுழல்களின் எண்ணிக்கையைக் கொண்டு வரிசைமாற்றங்களின் எண்ணிக்கைக் காணல்
[தொகு]சரியாக j சேரா சுழல்களைக்கொண்ட k உறுப்புகளின் வரிசைமாற்றங்களின் என்ணிக்கையை குறியிடப்படாத முதல்வகை ஸ்டெர்லிங் எண் s(k, j) தருகிறது.[2][3]
- அனைத்து k > 0 மதிப்புகளுக்கும் s(k, k) = 1
- k உறுப்புகளை, k சுழல்கள் கொண்டதாக வரிசைமாற்றும் வழி ஒன்றே ஒன்றுதான். இந்த வரிசைமாற்றத்தில் ஒவ்வொரு சுழலின் நீளமும் 1 ஆக இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு உறுப்பும் நிலைத்த புள்ளியாக இருக்கவேண்டும்.
- அனைத்து k > 0 மதிப்புகளுக்கும் s(k, 1) = (k − 1)!.
- k உறுப்புகளின் வரிசைமாற்றத்தில் சுழல்களின் எண்ணிக்கை 1 எனில் அச்சுழல்களின் நீளம் k ஆக இருக்கும். அதாவது அச்சுழல்கள் ஒவ்வொன்றும் k உறுப்புகளைக் கொண்டிருக்கும். 1 முதல் k வரையிலான உறுப்புகளை k! வழிகளில் வரிசைமாற்றலாம். அதேசமயம் k நீளமுள்ள ஒரு சுழலை வெவ்வேறுவிதமாக k வழிகளில் எழுதலாம். எடுத்துக்காட்டாக, 4 நீளமுள்ள சுழல் ( 1 2 4 3 ) = ( 2 4 3 1 ) = ( 4 3 1 2 ) = ( 3 1 2 4 ) என நான்கு விதங்களில் எழுதப்படுவதைக் காணலாம். எனவே
- s(k, 1) = k!/k = (k − 1)!.
- அனைத்து k > j > 1 மதிப்புகளுக்கும், s(k, j) = s(k − 1,j − 1) + s(k − 1, j)·(k − 1)
j சுழல்கள் கொண்டதாக k உறுப்புகளை இருவேறு வழிகளில் வரிசைமாற்றலாம்:
- உறுப்பு k ஐ ஒரு நிலைத்த புள்ளியாக எடுத்துக்கொண்டால் j − 1 சுழல்கள் கொண்ட k − 1 உறுப்புகளின் s(k − 1, j − 1) வரிசைமாற்றங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து k உறுப்பை 1 நீளமுடைய சுழலாக அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். (s(k − 1,j − 1) )
- உறுப்பு k ஐ ஒரு நிலைத்த புள்ளியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் j சுழல்கள் கொண்ட k − 1 உறுப்புகளின் s(k − 1, j ) வரிசைமாற்றங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து k உறுப்பை ஒவ்வொரு சுழலிலுமுள்ள k − 1 உறுப்புகளில் ஏதேனும் ஒன்றின்முன் சேர்த்துக்கொள்ளலாம் ( s(k − 1, j)·(k − 1).
எனவே,
- s(k, j) = s(k − 1,j − 1) + s(k − 1, j)·(k − 1)
சில மதிப்புகள்
[தொகு]k | j | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | sum | |
1 | 1 | 1 | ||||||||
2 | 1 | 1 | 2 | |||||||
3 | 2 | 3 | 1 | 6 | ||||||
4 | 6 | 11 | 6 | 1 | 24 | |||||
5 | 24 | 50 | 35 | 10 | 1 | 120 | ||||
6 | 120 | 274 | 225 | 85 | 15 | 1 | 720 | |||
7 | 720 | 1,764 | 1,624 | 735 | 175 | 21 | 1 | 5,040 | ||
8 | 5,040 | 13,068 | 13,132 | 6,769 | 1,960 | 322 | 28 | 1 | 40,320 | |
9 | 40,320 | 109,584 | 118,124 | 67,284 | 22,449 | 4,536 | 546 | 36 | 1 | 362,880 |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | sum |
நிலைத்தபுள்ளிகளின் எண்ணிக்கைகொண்டு வரிசைமாற்றங்களின் எண்ணிக்கை காணல்
[தொகு]j நிலைப்புள்ளிகள் கொண்ட k உறுப்புகளை வரிசைமாற்றும் வழிகளின் எண்ணிக்கையை f(k, j) தருகிறது.
- ஒவ்வொரு j < 0 அல்லது j > k மதிப்புகளுக்கு:
- f(k, j) = 0.
- f(0, 0) = 1.
- ஒவ்வொரு k > 1 ; k ≥ j ≥ 0 மதிப்புகளுக்கு:
- f(k, j) = f(k − 1, j − 1) + f(k − 1, j)·(k − 1 − j) + f(k − 1, j + 1)·(j + 1)
சில மதிப்புகள்
[தொகு]k | j | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | sum | |
1 | 0 | 1 | 1 | ||||||||
2 | 1 | 0 | 1 | 2 | |||||||
3 | 2 | 3 | 0 | 1 | 6 | ||||||
4 | 9 | 8 | 6 | 0 | 1 | 24 | |||||
5 | 44 | 45 | 20 | 10 | 0 | 1 | 120 | ||||
6 | 265 | 264 | 135 | 40 | 15 | 0 | 1 | 720 | |||
7 | 1,854 | 1,855 | 924 | 315 | 70 | 21 | 0 | 1 | 5,040 | ||
8 | 14,833 | 14,832 | 7,420 | 2,464 | 630 | 112 | 28 | 0 | 1 | 40,320 | |
9 | 133,496 | 133,497 | 66,744 | 22,260 | 5,544 | 1,134 | 168 | 36 | 0 | 1 | 362,880 |
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | sum |
குறிப்புகள்
[தொகு]- ↑ Gerstein 1987, p. 240
- ↑ Cameron 1994, p. 80
- ↑ Brualdi 2010, p. 290
மேற்கோள்கள்
[தொகு]- Brualdi, Richard A. (2010), Introductory Combinatorics (5th ed.), Prentice-Hall, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-602040-0
- Cameron, Peter J. (1994), Combinatorics: Topics, Techniques, Algorithms, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-45761-0
- Gerstein, Larry J. (1987), Discrete Mathematics and Algebraic Structures, W.H. Freeman and Co., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-1804-9