சுட்டெவானீ வெர்னர்
சுட்டவானீ சி. வெர்னர் (Stephanie C. Werner) (பிறப்பு: 1974 [1]:{{{3}}}) ஒரு செருமானியக் கோளியலாளரும் புவியியலாளரும் ஆவார். இவர் செவ்வாய் ஆய்வுக்காகவும் ஆர்க்டிக் ஆய்வுக்காகவும் பெயர்பெற்றவர். இவர் நார்வே ஓசுலோ பல்கலைக்கழகத்தின் புவிப் படிமலர்ச்சி, இயங்கியல் துறையின் பேராசிரியர் ஆவார்.
இவர் செவ்வாய் மோயாவே கணத்தாக்கக் குழிப்பள்ள விண்கற்களையும் ஆய்வு செய்தார்.[2]:{{{3}}} மேலும் இவர் சூரியக் குடும்பக் கோள் நகர்வு காலகட்டம் முன்பு கருதியதை விட மிகமுந்தியது எனக் கணித்தார்.[3]:{{{3}}}
கல்வியும் வாழ்க்கைப்பணியும்
[தொகு]வெர்னர் 1999 இல் கீல் பல்கலைக்கழகத்தில் இருந்து புவி இயற்பியலில் பட்டயம் பெற்றார். இவர் தன் முனைவர் (Dr. rer. nat.) பட்டத்தை 2005 இல் பெர்லின் கட்டற்ற பல்கலைக்கழகத்தில் பெற்றார்; இவரது முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு செவ்வாய் நிலவியல் படிமலர்ச்சி வரலாறு, மண்ணடுக்குக் காலவியல் முதன்மைக் கூறுபாடுகள் என்பதாகும்.[4]:{{{3}}}
பெர்லின் கட்டற்ற பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றதும், இவர் 2009 இல் நார்வே நில அளக்கைத் துறையில் சேர்ந்து பிறகு ஓசுலோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளரானார். அங்கு இவர் 2014 இல் இணைப்பேராசிரியராகவும் 2017 இல் முழுநிலைப் பேராசிரியராகவும் ஆனார்.[4]:{{{3}}}
தகைமைகள்
[தொகு]In 2019, வெர்னர் 2019 இல் நார்வே அறிவியல், இலக்கியக் கல்விக்கழக உறுப்பினாராகத் தேர்வு செய்யப்பட்டார். [5]:{{{3}}} சிறுகோள் 11449 சுட்டெவ்வெர்னர் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. [6]:{{{3}}}
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Birth year from German National Library catalog entry, retrieved 2020-03-20
- ↑ Bennington-Castro, Joseph (March 6, 2014), "Meteorites on Earth May Be From Ancient Crater on Mars, Study Says", National Geographic
- ↑ Strain, Daniel (August 12, 2019), "A new timeline of Earth's cataclysmic past", CU Boulder Today, University of Colorado Boulder
- ↑ 4.0 4.1 Stephanie Werner, University of Oslo Department of Geosciences, பார்க்கப்பட்ட நாள் 2020-03-20
- ↑ Academy Members, Norwegian Academy of Science and Letters, பார்க்கப்பட்ட நாள் 2020-03-20
- ↑ "11449 Stephwerner (1979 QP)", JPL Small-Body Database, Jet Propulsion Laboratory, பார்க்கப்பட்ட நாள் 2020-03-20
வெளி இணைப்புகள்
[தொகு]- சுட்டெவானீ வெர்னர் publications indexed by Google Scholar