சுட்டுச் சார்பு
கணிதத்தில் சுட்டுச் சார்பு (Indicator function) அல்லது சிறப்பியல்புச் சார்பு (characteristic function) என்பது, தான் வரையறுக்கபட்ட கணத்தின் (ஆட்களம்) ஏதேனுமொரு உட்கணத்ததைச் சேர்ந்ததாக ஒரு உறுப்பு இருக்குமா இல்லையா என்பதைச் சுட்டிக் காட்டும் இயல்புடைய சார்பாகும். அதாவது f சார்பின் ஆட்களம் X எனில், அக்கணத்தின் ஓர் உட்கணம் A இன் உறுப்புகளுக்கு இச்சார்பின் மதிப்புகள் 1 ஆகவும், A உறுப்புகளாக இல்லாதவற்றுக்கு 0 ஆகவும் இருக்கும்.
நிகழ்தவு கோட்பாட்டில் சிறப்பியல்புச் சார்பு என்ற பெயர் இச்சார்புக்குப் தொடர்பில்லாமல் இருப்பதால் அங்கு சுட்டுச் சார்பு என்றே அழைக்கப்படுகிறது.
வரையறை
[தொகு]X கணத்தின் உட்கணம் A இன் சுட்டுச் சார்பு, இன் வரையறை:
1A(x) க்குப் பதிலாக [x ∈ A] என்றும் குறிக்கலாம் (Iverson bracket).
1A சில சமயங்களில் 1A ∈ A, χA அல்லது IA அல்லது வெறுமனே A என்றும் குறிக்கப்படுகிறது. சிறப்பியல்பு (characteristic) என்பதன் கிரேக்கச் சொல்லின் முதல் எழுத்து χ .)
பண்புகள்
[தொகு]- சுட்டுச் சார்பு X இன் உறுப்புகளை வீச்சு {0,1} உடன் இணைக்கும் ஒரு கோப்பாகும்.
- A ஒரு வெற்றற்ற தகு உட்கணமாக இருந்தால் மட்டுமே, இக்கோப்பு ஒரு உள்ளிடுகோப்பாக இருக்கும்.
- A ≡ X எனில், 1A = 1.
- A ≡ Ø எனில், 1A = 0.
A மற்றும் X இன் இரு உட்கணங்கள் எனில்:
பொதுவாக, X இன் உட்கணங்கள் எனில்,
x ∈ X:
|F| என்பது F இன் அளவை எண்.
நிகழ்தகவுக் கோட்பாட்டில், X ஒரு நிகழ்தகவு வெளி; அதன் நிகழ்தகவு அளவு ; A ஒரு அளவிடக்கூடிய கணம் எனில் A இன் நிகழ்தகவுக்குச் சமமான எதிர்பார்ப்பு மதிப்புடைய சமவாய்ப்பு மாறியாக 1A இருக்கும்
சராசரி, மாறுபாட்டெண், இணை மாறுபாட்டெண்
[தொகு]தரப்பட்ட நிகழ்தகவு வெளி - எனில் சுட்டு சமவாய்ப்பு மாறி இன் வரையறை:
-
- மற்றபடி
மேற்கோள்கள்
[தொகு]- Folland, G.B. (1999). Real Analysis: Modern Techniques and Their Applications (Second ed.). John Wiley & Sons, Inc.
- Cormen, Thomas H.; Leiserson, Charles E.; Rivest, Ronald L.; Stein, Clifford (2001). "Section 5.2: Indicator random variables". Introduction to Algorithms (Second Edition ed.). MIT Press and McGraw-Hill. pp. 94–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-03293-7.
{{cite book}}
:|edition=
has extra text (help) - Davis, Martin, ed. (1965). The Undecidable. New York: Raven Press Books, Ltd.
- Kleene, Stephen (1971) [1952]. Introduction to Metamathematics (Sixth Reprint with corrections). Netherlands: Wolters-Noordhoff Publishing and North Holland Publishing Company.
- Boolos, George; Burgess, John P.; Jeffrey, Richard C. (2002). Computability and Logic. Cambridge UK: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-00758-5.
- Lotfi A. Zadeh (June 1965). "Fuzzy sets" (PDF). Information and Control 8 (3): 338–353. doi:10.1016/S0019-9958(65)90241-X. http://www-bisc.cs.berkeley.edu/zadeh/papers/Fuzzy%20Sets-1965.pdf. பார்த்த நாள்: 2013-10-07.
- Joseph Goguen (1967). "L-fuzzy sets". Journal of Mathematical Analysis and Applications 18 (1): 145–174. doi:10.1016/0022-247X(67)90189-8.