அ. மு. யூசுப் சாகிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியாக்கம்
வரிசை 1: வரிசை 1:
'''அ. மு. யூசுப் சாகிப்''' [[இந்தியா]]வில் புகழ்பெற்ற ஓர் இசுலாமிய பத்திரிகையாளரும், எழுத்தாளரும், சிற்றிதழ் ஆசிரியருமாவார்.
'''அ. மு. யூசுப் சாகிப்''' [[இந்தியா]]வில் புகழ்பெற்ற ஓர் இசுலாமிய பத்திரிகையாளரும், எழுத்தாளரும், சிற்றிதழ் ஆசிரியருமாவார். சில திரைப்படங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.

==இதழியல் துறை==
==இதழியல் துறை==
1926ம் ஆண்டு இந்தியாவில் திருச்சியில் பிறந்த இவர் சிறு வயது முதலே இலக்கியத்திலும், இதழியலிலும் ஆர்வம் மிக்கவர். தனது 15வது வயதில் கதம்பம் என்ற கையெழுத்து இதழை நடத்தியுள்ளார். எஸ். எம். உமரும் இவரின் இக்கையெழுத்து இதழுக்கு ஒத்துழைப்பாக இருந்துள்ளார். பக்கர் என்பவரின் ஓவியங்கள் இவ்விதழை அலங்கரித்துள்ளன.
[[1926]]ம் ஆண்டு இந்தியாவில் திருச்சியில் பிறந்த இவர் சிறு வயது முதலே இலக்கியத்திலும், இதழியலிலும் ஆர்வம் மிக்கவர். தனது 15வது வயதில் கதம்பம் என்ற கையெழுத்து இதழை நடத்தியுள்ளார். எஸ். எம். உமரும் இவரின் இக்கையெழுத்து இதழுக்கு ஒத்துழைப்பாக இருந்துள்ளார். பக்கர் என்பவரின் ஓவியங்கள் இவ்விதழை அலங்கரித்துள்ளன. [[1947]]ம் ஆண்டில் காரைக்காலில் 'முஸ்லிம் லீக்' எனும் பெயரில் வார இதழ் ஒன்றை இவர் தொடங்கினார். இக்கால கட்டத்தில் இந்தியாவில் செய்தித் தணிக்கை காணப்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்களுக்கு உட்பட்டார். இத்தகைய இக்கட்டான நேரத்தில் இவரது நண்பர்கள் இவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழ் மொழியில் சிறப்பு பெற்றிருந்த [[மலாயா நண்பன்]] ஆசிரியர் கரீம் கனியுடன் இணைந்து பணியாற்றினார். சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பிய இவர் 1952ம் ஆண்டு [[மறுமலர்ச்சி (சிற்றிதழ்)| மறுமலர்ச்சி]] எனும் வாராந்த இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். இசுலாமிய இதழ்களில் நீண்ட காலங்களாக வெளிவந்த இதழாகவும், சில காலங்கள் அதிக விற்பனையுள்ள சிற்றிதழாகவும் இது இருந்துள்ளது. மறுமலர்ச்சி 'இசுலாமியக் கலைக்களஞ்சியம்' எனும் நூலினையும் வெளியிட்டுள்ளது.

==முஸ்லிம் லீக் வார இதழ்==
==அரசியல்==
1947ம் ஆண்டில் காரைக்காலில் 'முஸ்லிம் லீக்' எனும் பெயரில் வார இதழ் ஒன்றை இவர் தொடங்கியுள்ளார். இக்காலகட்டத்தில் இந்தியாவில் செய்தித் தணிக்கை காணப்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்களுக்கு உட்பட்டார். இத்தகைய இக்கட்டான நேரத்தில் இவரது நண்பர்கள் இவரை சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்துள்ளனர். பிற்காலத்தில் காரைக்காலுக்கு 'முஸ்லிம் லீக்' இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவராவார். ஆரம்பத்தில் சாதாரண தொண்டனாக முஸ்லிம் லீக்கில் இணைந்து 'தமிழ் நாடு முஸ்லிம் லீக் பொதுச் செயலாள'ராக வளர்ச்சியடைந்தார்.

==மலாயா நண்பனில் பணி==
இவர் முஸ்லிம் லீக்கில் இணைந்து “தமிழ் நாடு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராக” வளர்ச்சியடைந்தார். காரைக்காலுக்கு 'முஸ்லிம் லீக்' இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவராவார்.
[[சிங்கப்பூர்]] சென்ற அ. மு. யூசுப் சாகிப் இக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் தமிழ் மொழியில் பிரபல்யம் பெற்றிருந்த [[மலாயா நண்பன்]] ஆசிரியர் கரீம் கனியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

==நீரிழிவு நோய் பாதிப்பு==
இவர் [[நீரிழிவு]] நோய் காரணமாக மிகவும் பாதிப்படைந்தார். இதில் ஒரு காலை இழந்தார். இருப்பினும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். இச்சந்தர்ப்பத்தில் "கால் போனால் போகட்டுமே, பேனா பிடிக்க கை இருக்கின்றதே, தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று இதழியல் பணி தொடர்ந்தார்.


==மறுமலர்ச்சி==
சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பிய இவர் 1952ம் ஆண்டு [[மறுமலர்ச்சி (சிற்றிதழ்)| மறுமலர்ச்சி]] எனும் வாராந்த இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். இசுலாமிய இதழ்களில் நீண்ட காலங்களாக வெளிவந்த இதழாகவும், சில காலங்கள் அதிக விற்பனையுள்ள சிற்றிதழாகவும் இது இருந்துள்ளது. மறுமலர்ச்சி 'இசுலாமியக் கலைக்களஞ்சியம்' எனும் நூலினையும் வெளியிட்டுள்ளது.
==பின்னணிக் குரல்==
சில திரைப்படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துமுள்ளார்.
==காலை இழந்தார்==
நீரிழிவு நோய் காரணமாக இவர் ஒரு காலை இழந்தார். இருப்பினும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். இச்சந்தர்ப்பத்தில் "கால் போனால் போகட்டுமே, பேனா பிடிக்க கை இருக்கின்றதே, தொடர்ந்து பணியாற்றுவேன்" எனக்கூறி தனது இதழியல் பணியைத் தொடர்ந்துள்ளார்.
==இறப்பு==
==இறப்பு==
[[ஏப்ரல் 23]] [[1993]]ல் தனது 67வது வயதில் காலமானார்.
இவர் [[ஏப்ரல் 23]], [[1993]] அன்று அவருடைய 67வது வயதில் காலமானார்.


[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]

02:28, 26 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

அ. மு. யூசுப் சாகிப் இந்தியாவில் புகழ்பெற்ற ஓர் இசுலாமிய பத்திரிகையாளரும், எழுத்தாளரும், சிற்றிதழ் ஆசிரியருமாவார். சில திரைப்படங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.

இதழியல் துறை

1926ம் ஆண்டு இந்தியாவில் திருச்சியில் பிறந்த இவர் சிறு வயது முதலே இலக்கியத்திலும், இதழியலிலும் ஆர்வம் மிக்கவர். தனது 15வது வயதில் கதம்பம் என்ற கையெழுத்து இதழை நடத்தியுள்ளார். எஸ். எம். உமரும் இவரின் இக்கையெழுத்து இதழுக்கு ஒத்துழைப்பாக இருந்துள்ளார். பக்கர் என்பவரின் ஓவியங்கள் இவ்விதழை அலங்கரித்துள்ளன. 1947ம் ஆண்டில் காரைக்காலில் 'முஸ்லிம் லீக்' எனும் பெயரில் வார இதழ் ஒன்றை இவர் தொடங்கினார். இக்கால கட்டத்தில் இந்தியாவில் செய்தித் தணிக்கை காணப்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல்களுக்கு உட்பட்டார். இத்தகைய இக்கட்டான நேரத்தில் இவரது நண்பர்கள் இவரை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழ் மொழியில் சிறப்பு பெற்றிருந்த மலாயா நண்பன் ஆசிரியர் கரீம் கனியுடன் இணைந்து பணியாற்றினார். சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பிய இவர் 1952ம் ஆண்டு மறுமலர்ச்சி எனும் வாராந்த இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார். இசுலாமிய இதழ்களில் நீண்ட காலங்களாக வெளிவந்த இதழாகவும், சில காலங்கள் அதிக விற்பனையுள்ள சிற்றிதழாகவும் இது இருந்துள்ளது. மறுமலர்ச்சி 'இசுலாமியக் கலைக்களஞ்சியம்' எனும் நூலினையும் வெளியிட்டுள்ளது.

அரசியல்

இவர் முஸ்லிம் லீக்கில் இணைந்து “தமிழ் நாடு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராக” வளர்ச்சியடைந்தார். காரைக்காலுக்கு 'முஸ்லிம் லீக்' இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவராவார்.

நீரிழிவு நோய் பாதிப்பு

இவர் நீரிழிவு நோய் காரணமாக மிகவும் பாதிப்படைந்தார். இதில் ஒரு காலை இழந்தார். இருப்பினும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். இச்சந்தர்ப்பத்தில் "கால் போனால் போகட்டுமே, பேனா பிடிக்க கை இருக்கின்றதே, தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று இதழியல் பணி தொடர்ந்தார்.

இறப்பு

இவர் ஏப்ரல் 23, 1993 அன்று அவருடைய 67வது வயதில் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மு._யூசுப்_சாகிப்&oldid=827509" இலிருந்து மீள்விக்கப்பட்டது