ரிக்டர் அளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uz:Zilzila magnitudasi
சி தானியங்கிஇணைப்பு: az:Rixter şkalası
வரிசை 14: வரிசை 14:
[[af:Richterskaal]]
[[af:Richterskaal]]
[[ar:مقياس ريختر]]
[[ar:مقياس ريختر]]
[[az:Rixter şkalası]]
[[be:Магнітуда землетрасення]]
[[be:Магнітуда землетрасення]]
[[bg:Скала на Рихтер]]
[[bg:Скала на Рихтер]]

02:34, 30 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

ரிக்டர் அளவு (Richter magnitude scale) என்பது நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும். அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் சார்ள்ஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பூகம்பம் நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் பூகம்பம் அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு பூகம்பம் ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்டர்_அளவு&oldid=805690" இலிருந்து மீள்விக்கப்பட்டது