கான் திரைப்பட விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tl:Pista ng Pelikula sa Cannes |
சி தானியங்கிமாற்றல்: ms:Pesta Filem Cannes |
||
வரிசை 74: | வரிசை 74: | ||
[[ml:കാൻ ചലച്ചിത്രോത്സവം]] |
[[ml:കാൻ ചലച്ചിത്രോത്സവം]] |
||
[[mr:कान चित्रपट महोत्सव]] |
[[mr:कान चित्रपट महोत्सव]] |
||
[[ms: |
[[ms:Pesta Filem Cannes]] |
||
[[nl:Filmfestival van Cannes]] |
[[nl:Filmfestival van Cannes]] |
||
[[nn:Filmfestivalen i Cannes]] |
[[nn:Filmfestivalen i Cannes]] |
12:47, 17 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
கான் திரைப்பட விழா | |
---|---|
வார்ப்புரு:Caption விழாச் சின்னம் | |
இடம் | கான், பிரான்ஸ் |
மொழி | அனைத்துலகம் |
இணையத் தளம் |
கான் திரைப்பட விழா (Cannes Film Festival), 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழைய திரைப்பட விழாக்களில் ஒன்று. வெனிஸ், பேர்லின், சன்டான்ஸ் ஆகிய திரைப்பட விழக்களுடன் இதுவும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வு ஆகும். தனிப்பட்ட விழாவான இது ஆண்டு தோறும் பெரும்பாலும் மே மாதத்தில், தெற்கு பிரான்சில் உள்ள கான் (Cannes) நகரில் இடம்பெறுகிறது.
விழா
நிகழ்ச்சிகள்
கான் திரைப்பட விழா பல பிரிவுகளாக ஒழுங்குசெய்யப் படுகிறது.
- அதிகாரமுறைத் தேர்வு - விழாவின் முக்கிய நிகழ்வு.
- போட்டி - தங்க பாம் விருதுக்காகப் போட்டியிடும் 20 படங்கள் லுமியெர் அரங்கில் (Théâtre Lumière) திரையிடப்படுகின்றன.
- பல் நோக்குத் தேர்வு - இதற்காக 20 படங்கள், உலகின் பல பண்பாடுகளிலுமிருந்து தேர்வு செய்யப்படுகின்றன. இவை சாலே டெபுசி (Salle Debussy) அரங்கில் திரையிடப்படும்.
- போட்டிக்குப் புறம்பானவை - இவையும் லுமியெர் அரங்கிலேயே திரையிடப் படுகின்றன. ஆனால் இவை முக்கியமான பரிசுக்கான போட்டியில் இல்லை.
- சிறப்புத் திரையிடல் - இப் படங்களின் தன்மைக்குத் தக்கவாறு இவற்றுக்காகச் சிறப்பாக அமைக்கப்பட்ட சூழல் தேர்வுக்குழுவினால் தெரிவுசெய்யப்படுகிறது.
- சினிபவுண்டேசன் - 15 குறும் படங்களும், இடைத்தர நீளம் கொண்ட படங்களும் உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படக் கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப் படுகின்றன.
- குறும்படங்கள் - இவை குறும்படத் தங்க பாம் விருதுக்காகப் போட்டியிடுகின்றன.
- இணைத் தேர்வுகள் - இவை போட்டி சாராத நிகழ்வுகள். திரைப்படத்துறையின் பிற அம்சங்களைக் கண்டறிவதற்காக ஒழுங்கு செய்யப்படுகின்றது.
- பிற பிரிவுகள் - கான் விழாவின் போது வெளி அமைப்புக்களால் வழங்கப்படும் நிகழ்வுகள்.
- நிகழ்ச்சிகள்