திருத்தந்தையின் வழுவாவரம் வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Jayarathina பக்கம் திருத்தந்தையின் தவறா வரம் என்பதை திருத்தந்தையின் வழுவாவரம் வரம் என்பதற்கு நகர்த்தினார்: திருச்சபைச் சட்டத் தொகுப்பில் உள்ளது போல மாற்றப்படுகின்றது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:45, 29 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

திருப்பீடத்தின் முத்திரை

இவ்வுலகில் இயேசு கிறித்துவின் பதில் ஆள் என்ற முறையில், நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் சார்ந்த படிப்பினைகளை மக்களுக்கு வழங்கும்போது திருத்தந்தை சரியானவற்றை மட்டுமே கற்பிக்க கடவுள் உதவி செய்வார் என்ற கத்தோலிக்கரின் விசுவாசக் கோட்பாடே திருத்தந்தையின் தவறா வரம் அல்லது வழுவா வரம் (Papal infallibility) என்று அழைக்கப்படுகிறது.

கத்தோலிக்கரின் மறுப்பு

திருத்தந்தையின் தவறா வரம் பற்றிய கருத்து முதலில் திருத்தந்தையர்களாலேயே மறுக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டில் பீட்டர் ஒலிவியினால் கற்பிக்கப்பட்டு,[1] 14ம் நூற்றாண்டில் பிரான்சிஸ்கன் ஆன்மீகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவறா வரம் பற்றிய திருத்தந்தை மூன்றாம் நிக்கலசின் அறிக்கையினை திருத்தந்தை இருபத்திரெண்டாம் அருளப்பர் ஏற்க மறுத்தார்.[2][3][4]

விசுவாசக் கோட்பாடு

முதலில் திருத்தந்தையின் தவறா வரம் என்பதன் பொருள் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படாததால், பலரும் இதனை ஏற்க மறுத்தனர். ஒழுக்கம் மற்றும் ஆன்மீகம் ஆகியவைத் தொடர்பான அதிகாரப்பூர்வ போதனைகளை வழங்கும்போது திருத்தந்தை தவறா வரம் உடையவர் என்னும் கருத்து பின்னாட்களில் ஏற்றுகொள்ளப்பட்டது.[5] இது திருத்தந்தை ஒன்பதாம் பயஸால் கூட்டப்பட்ட முதல் வத்திக்கான் சங்கத்தில் விசுவாசக் கோட்பாடாகவும் அறிக்கையிடப்பட்டது.

குறிப்புக்கள்

  1. Jackson, G. L., (207) Catholic, Lutheran, Protestant: a doctrinal comparison of three Christian Confessionsp185.
  2. Tierney, B., (1972) Origins of Papal Infallibility 1150-1350 - A Study on the Concepts of Infallibility, Sovereignty, and Tradition in the Middle Ages (E J Brill; Leiden, Netherlands), p171
  3. Hasler, A. B., (1981) How the Pope Became Infallible: Pius IX and the Politics of Persuasion (Doubleday; Garden City, NY),pp36-37
  4. Thomas Turley, "Infallibilists in the Curia of Pope John XXII" (Journal of Medieval History (April 1975), 1 (1), pp. 71-101 (Abstract)
  5. Brian Gogan, The Common Corps of Christendom (Brill 1982 ISBN 978-9-00406508-6), p. 33

வெளி இணைப்புகள்