பனிக்கட்டி வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

07:13, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

பனிக்கட்டி வணிகம் அல்லது உறைந்த நீர் வணிகம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து இயற்கையாக உறைந்த பனிக்கட்டிகள் வெட்டி எடுக்கப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டு விற்பனை செய்யப்பட்டதைக் குறிக்கும். அமெரிக்காவின் பிரடெரிக் தீயூடர் என்பவரால் 1806-இல் இவ்வணிகம் தொடங்கப்பட்டது. சனவரி் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள ஏரிகள், குளங்கள் உறைந்து பனிக்கட்டி ஆகி விடும். இவற்றை வெட்டி எடுத்து கப்பலில் எடுத்துச் சென்று பல நாடுகளில் விற்பனை செய்தார். இந்தியாவுக்கும் இத்தகைய பனிக்கட்டிகள் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதற்காக பனிக்கட்டிகளை சேமிப்பதற்காக கிடங்குகளும் கட்டப்பட்டன.

இவ்வாறு அனுப்பப் பட்ட பனிக்கட்டிகள் விற்பனைக்கு வருகையில் ஏறத்தாழ பாதி உருகியிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிக்கட்டி_வணிகம்&oldid=1880659" இலிருந்து மீள்விக்கப்பட்டது