எலீ வீசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:
==இளமைக் காலம்==
==இளமைக் காலம்==


எலீ வீசல் ருமேனியாவில் ஒரு சிற்றுரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நாசிக்கள் செய்த மனிதப் படுகொலைகளை நேரில் பார்த்து அனுபவித்தார். யூத இன மக்கள் போலந்தில் உள்ள ஆஸ்விட் (Auschwitz) என்னும் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். எலீ வீசலும் அவர் பெற்றோர்களும் அங்கு அனுப்பப்பட்டனர். அங்கு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டு அவருடைய தாயும் தங்கையும் இறந்து போனார்கள் பின்னர் 1945 இல் இவருடைய தந்தையார் பட்டினியாலும் நோயினாலும் இறந்தார். இந்த அவலங்களையும் அடக்குமுறைகளையும் 17 அகவைச் சிறுவன் எலீ வீசல் கண்கூடாகப் பார்த்து உள்ளம் வெதும்பினார். நல்ல வேளையாக இரண்டு தமக்கைகள் உயிர் பிழைத்தனர்.
எலீ வீசல் ருமேனியாவில் ஒரு சிற்றுரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நாசிக்கள் செய்த மனிதப் படுகொலைகளை நேரில் பார்த்து மனம் கலங்கினார். யூத இன மக்கள் போலந்தில் உள்ள ஆஸ்விட் (Auschwitz) என்னும் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். எலீ வீசலும் அவர் பெற்றோர்களும் அங்கு அனுப்பப்பட்டனர். அங்கு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டு அவருடைய தாயும் தங்கையும் இறந்து போனார்கள் பின்னர் 1945 இல் இவருடைய தந்தையார் பட்டினியாலும் நோயினாலும் இறந்தார். இந்த அவலங்களையும் அடக்குமுறைகளையும் 17 அகவைச் சிறுவன் எலீ வீசல் கண்கூடாகப் பார்த்து உள்ளம் வெதும்பினார். நல்ல வேளையாக இரண்டு தமக்கைகள் உயிர் பிழைத்தனர்.


==எழுத்துப் பணி==
==எழுத்துப் பணி==

16:43, 10 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

எலீ வீசல் (Elie wiesel 30, செப்டம்பர் 1928) ஒரு அரசியல் போராளி, பேராசிரியர், புதினப் படைப்பாளர், யூதப் பேரழிவிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1986 ஆம் ஆண்டு பெற்றவர், புனைவு, புனைவல்லாத நூல்கள் 40க்கும் மேல் எழுதியவர்.

இளமைக் காலம்

எலீ வீசல் ருமேனியாவில் ஒரு சிற்றுரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். 1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நாசிக்கள் செய்த மனிதப் படுகொலைகளை நேரில் பார்த்து மனம் கலங்கினார். யூத இன மக்கள் போலந்தில் உள்ள ஆஸ்விட் (Auschwitz) என்னும் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். எலீ வீசலும் அவர் பெற்றோர்களும் அங்கு அனுப்பப்பட்டனர். அங்கு கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டு அவருடைய தாயும் தங்கையும் இறந்து போனார்கள் பின்னர் 1945 இல் இவருடைய தந்தையார் பட்டினியாலும் நோயினாலும் இறந்தார். இந்த அவலங்களையும் அடக்குமுறைகளையும் 17 அகவைச் சிறுவன் எலீ வீசல் கண்கூடாகப் பார்த்து உள்ளம் வெதும்பினார். நல்ல வேளையாக இரண்டு தமக்கைகள் உயிர் பிழைத்தனர்.

எழுத்துப் பணி

நேசப் படைகளின் உதவியோடு விடுதலையான லீ வீசல் 1948இல் பாரிசுக்குச் சென்றார் அங்கு பிரஞ்சு மொழியைக் கற்றுக் கொண்டார். இதழாளராக வேலையில் சேர்ந்தார். 'லார்ச்' (L'arche) என்னும் பிரெஞ்சு யூதப் பத்திரிகையிலும் இசுரேலிய பிரெஞ்சு செய்தித் தாள்களிலும் எழுதத் தொடங்கினார். வதை முகாம்களில் நிகழ்ந்த வன்செயல்களையும் கொடுமையான அனுபவங்களையும் போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியும் எழுத அவருக்கு மனம் இல்லை. ஆனால் 1952 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரன்காயிஸ் மாரிக் (Fancois Mauriac) என்னும் அறிஞரின் தொடர்பும் நட்பும் தூண்டுதலும் தாம் அடைந்த வதை முகாம் பட்டறிவுகளை எழுதும் ஊக்கத்தை வீசலுக்கு அளித்தன.

நூல்கள்

முதலில் இட்டிஸ் மொழியில் 900 பக்கங்களில் தம் வதை முகாமின் அனுபவங்களை 'உலகம் அமைதியாக உள்ளது' என்னும் தலைப்பில் எலீ வீசல் எழுதினர். அது சுருக்கமாக புயனோஸ் அயர்சில் வெளிவந்தது. மீண்டும் அதை பிரெஞ்சு மொழியில் எழுதினார். பின்னர் அந்நூல் ஆங்கிலத்தில் குறு புதினமாக 'இரவு' (Night) என்னும் பெயரில் வெளியாகியது. இந்நூல் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தனது நினைவுக் குறிப்புகளை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.

பாசுடன் பல்கலைக் கழகத்தில் மாந்தவியல் துறையில் பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணி புரிந்தவர். நியூயார்க் நகரப் பல்கலைக் கழகம், அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு, யேல் பல்கலைக் கழகம் எனப் பல்வேறு கல்வி மையங்களில் பணியாற்றியவர்.

நோபல் பரிசு

வன்முறை, ஒடுக்குமுறை, இனவெறி ஆகியவற்றிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததற்காக 1986 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு எலீ வீசலுக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான விருதுகளும் ஏராளம் பெற்றார்.

மனித உரிமைக் குரல்

யூதப் பேரழிவு குறித்து ஏராளமாகப் சொற்பொழிவுகள் ஆற்றிய வீசல் இசுரேல் சோவியத்து மற்றும் எத்தியோப்பிய யூதர்களின் அவல நிலைகள் பற்றியும் தென்னாப்பிரிக்க நிறவெறிக்குப் பலியானவர்கள், குர்த் இன மக்கள் ஆகியோரின் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ருமேனியாவில் யூதர்களைக் கொன்று குவித்தபோது உண்மையறியும் குழுவுக்குத் தலைமைத் தாங்கி ருமேனிய அரசின் அட்டூழியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

1955இல் அமெரிக்காவில் குடியேறிய எலீ வீசல் தற்பொழுது நியூ யார்க்கில் வாழ்ந்து வருகிறார்.

மேற்கோள்

https://www.jewishvirtuallibrary.org/jsource/biography/Wiesel.html

http://hmd.org.uk/resources/poetry/never-shall-i-forget-elie-wiesel

http://www.theguardian.com/childrens-books-site/2014/aug/25/elie-wiesel-night-jewish-identity-amnesty-teen-takeover-2014

உசாத்துணை

எலீ வீசல் உரையாடல்கள், தமிழில் லதா ராமகிருஷ்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை-83

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலீ_வீசல்&oldid=1874957" இலிருந்து மீள்விக்கப்பட்டது