வளைகுடாப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 78 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 18: வரிசை 18:


[[பகுப்பு:போர்கள்]]
[[பகுப்பு:போர்கள்]]

[[uk:Війна в Перській затоці]]

20:19, 16 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும்.

இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது

ஈராக் 2 ஆகஸ்ட் 1990 அன்று குவைத் நாட்டை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, ஈராக்கியப் படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளிலும் போர் நடந்த்து.


குவைத் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து உடனடியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் தன் நாட்டுப் படைகளை சவுதி அரேபியாவில் நிறுத்தி மற்ற நாட்டுகளும் தங்களது படைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பல நாடுகளும் அமெரிக்காத் தலைமையிலானக் கூட்டுப் படையில் இணைந்தன. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளேப் பெரும் பங்கு வகித்தன. மொத்தச் செலவான 60 பில்லியன் அமெரிக்க டாலரில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சவுதி அரேபியா செலுத்தியது


இந்தப் போரில் வான்வழித் தாக்குதல் 17 சனவரி 1991 அன்றும் தொடர்ந்து தரைவழித் தாக்குதல் 23 பிப்ரவரி 1991 அன்றும் தொடங்கியது.

குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் வெற்றி பெற்று போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைகுடாப்_போர்&oldid=1381678" இலிருந்து மீள்விக்கப்பட்டது