திருப்பீடத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:


[[பகுப்பு:திருத்தந்தையர்கள்|*]]
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்|*]]
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
[[பகுப்பு:தேர்தல்]]
[[பகுப்பு:தேர்தல்]]
[[பகுப்பு:திருப்பீடம்]]
[[பகுப்பு:திருப்பீடம்]]

17:01, 3 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

திருப்பீடத் தேர்தல் என்பது கர்தினால்கள் உரோமை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய ஆயரைத் தேர்வு செய்யக் கூடும் கூட்டம் ஆகும். புனித பேதுருவின் வழிவந்தவர் என கத்தோலிக்கர்களால் நம்பப்படும் உரோமை ஆயர், திருத்தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார்.[1] திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையின் கண்கானும் தலைவராக ஏற்கப்படுகின்றார். மேலும் திருத்தந்தை வத்திக்கான் நாட்டின் அரசு தலைவரும் ஆவார்.

ஒரு நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடப்பில் உள்ள மிகப் பழைமையான முறை திருப்பீடத் தேர்தல் முறையாகும்.

காலம் காலமாக நடைப்பெற்று வந்த அரசியல் குறுக்கீடுகளின் உச்சத்தில் கி.பி 1268 முதல் 1271 வரை திருப்பீடத் தேர்தல் நீண்டது. இத்தேர்தலில் தேர்வான திருத்தந்தை பத்தாம் கிரகோரி 1274இல் இரண்டாம் இலியோன்ஸ் பொதுச்சங்கத்தின் போது திருப்பீடத் தேர்தலின் வாக்காளர்களாக பங்கேற்கும் கர்தினால்களை ஒன்றாகத் தனிமையில் பூட்டி வக்கவும், அவர்கள் புதிய திருத்தந்தையை தேர்வு செய்யும் வரை அங்கிருந்து வெளியேர கூடாதெனவும் உத்தரவிட்டார்.[2]

இக்காலத்தில் திருப்பீடத் தேர்தல் வத்திக்கான் நகரில் உள்ள திருத்தூதர் மாளிகையில் இருக்கும் சிஸ்டைன் ஆலயத்தில் நடைபெறுவது வழக்கம்.[3] திருத்தூதர்களின் காலம் முதல், உரோமை ஆயரும், மற்ற மறைமாவட்ட ஆயர்களைப் போவே, மறைமாவட்ட இறைமக்கள் மற்றும் குருக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்.[4]

1059 இல் திருப்பீடத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கர்தினால் குழாமிற்கு மட்டுமே உரியது என வரையறுக்கப்பட்டது.[5] 1970 இல், திருத்தந்தை ஆறாம் பவுல் திருப்பீடம் காலயான நாளில் 80 வயதினைத் தாண்டாத கர்தினால்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என சட்டம் இயற்றினார்.

தற்போது வழக்கில் உள்ள விதிமுறைகளும் நெறிமுறைகளும் திருத்தந்தை முத்.இரண்டாம் யோவான் பவுலினால் Universi Dominici Gregis (ஆண்டவருடைய அனைத்து உலக மந்தையின் ஆயர்) என்னும் திருத்தூதரக ஆணையல் (apostolic constitution) நிறுவப்பட்டு[3] திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் சொந்த விருப்பப்படி (motu proprio) 11 ஜூன் 2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது ஆகும். திருத்தந்தையாக தேர்வுசெய்யப்படுபவர் மூன்றில் இரண்டு பங்கு கர்தினால்களின் (அதி பெரும்பான்மை) ஆதரவைப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.[6][7]

இதனையும் பார்க்க

மேற்கோள்கள்

  1.  Fanning, William H. W. (1913). "Vicar of Christ". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  2.  Goyau, Georges (1913). "Second Council of Lyons (1274)". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  3. 3.0 3.1 John Paul II (22 பிப்ரவரி 1996). Universi Dominici Gregis. Apostolic constitution. Vatican City: Vatican Publishing House.
  4. Baumgartner 2003, p. 4.
  5.  Weber, N. A. (1913). "Pope Nicholas II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  6. Benedict XVI (11 ஜூன் 2007). De aliquibus mutationibus in normis de electione Romani Pontificis (in Latin). Motu proprio. Vatican City: Vatican Publishing House.
  7. "Pope alters voting for successor". BBC News. 26 ஜூன் 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பீடத்_தேர்தல்&oldid=1337786" இலிருந்து மீள்விக்கப்பட்டது