சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
clean up
வரிசை 24: வரிசை 24:
====அருவச்சொத்து====
====அருவச்சொத்து====
இவை பௌதீக தன்மை குறைந்த கண்ணால் காணவொண்ணாத சொத்தாகும்(Intangible assets).இவற்றில் காப்புரிமை,விற்பனை குறியீடு,[[நன்மதிப்பு]] என்பன உள்ளடக்கப்படும்.
இவை பௌதீக தன்மை குறைந்த கண்ணால் காணவொண்ணாத சொத்தாகும்(Intangible assets).இவற்றில் காப்புரிமை,விற்பனை குறியீடு,[[நன்மதிப்பு]] என்பன உள்ளடக்கப்படும்.

[[பகுப்பு:கணக்கு பதிவியல்]]
[[பகுப்பு:கணக்கு பதிவியல்]]



04:48, 24 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

கணக்கியல் மற்றும் வணிகத்தில் சொத்து எனப்படுவது ஒரு தனிநபரால் அல்லது சேர்ந்தியங்கும் ஒரு குழுவினால் வருமானத்தை ஈட்டிதரும் விதமாக வைத்திருக்கும் அனைத்து வளங்களும் சொத்து (Asset) எனப்படும்.சுருக்கமாக சொல்லின் காசும்,காசாக மாறக்கூடிய் வளங்களும் சொத்து எனலாம்.

பொருளியலில் செல்வத்தினை(wealth) கொண்டிருக்ககூடிய அனைத்து வடிவங்களும் சொத்து என வரைவிலக்கணப்படுத்தப்படும்.

சொத்தின் வகைகள்

சொத்து அவற்றின் திரவதன்மை, வாழ்வு காலத்தை பொறுத்து வகைபிரிக்கப்படும்.ஐந்தொகையில் நீண்ட ஆயுளினை பொறுத்து மேலிருந்து கீழாக பட்டியல் படுத்தப்படும்.கீழே திரவதன்மை அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நடைமுறை சொத்து

உடனடியாக காசாக மாறக்கூடிய தன்மையினை உடைய அதாவது திரவத்தன்மை வாய்ந்த சொத்துக்கள் நடைமுறை சொத்தினுள் அடங்கும்.இவை வியாபார நடவடிக்கையினால் இவற்றின் பெறுமதி கூடிக்குறையலாம்.5வகையான பிரிவுகளாக காணப்படும் அவைகள்,
1.காசு- இதுவே அதீதிரவத்தன்மை வாய்ந்த சொத்தாகும்.இவற்றில் கையிலுள்ள காசு,வங்கிவைப்புக்கள்,காசோலைகள் என்பன உள்ளடக்கப்படும்.
2.குறுங்கால மூதலீடுகள்
3.கடன்பட்டோர்
4.கையிருப்பு
5.முற்பண செலவுகள்- எதிர்கால நுகர்விற்கென கொடுக்கப்பட்டுள்ள பணத்தினை குறிக்கும்.

இவை தொழிற்படும்மூலதனம்(working capital) எனவும் அழைக்கப்படும்.

நீண்டகால மூதலீடுகள்

நீண்ட காலத்தின் பின்னர் பணமாக மாறும் தன்மையினை கொண்டிருக்கும் முதலீடுகள் நீண்டகால முதலீடுகள்(Long-term investments) எனப்படும்.பிணைகள்,முறிகள,வங்கி நிலையான வைப்பு,காப்புறுதி,கடன்பத்திரம் என்பன இவற்றிலடங்கும்.

நிலையான சொத்துக்கள்

வியாபார நிறுவனத்தில் நீண்ட பாவனை (ஒரு வருடத்திற்கும் மேலே) உடையதும் இலாபமீட்டக்கூடியதுமான வளங்கள் நிலையான சொத்து அல்லது நடைமுறையல்லா சொத்து எனப்படும்.இவற்றில் நிலம்,கட்டிடம்,இயந்திரங்கள்,தளபாடம்,கருவிகள் என்பன உள்ளடக்கப்படும்.இவற்றில் நிலம் தவிர்ந்த எனையவை பெறுமதி தேய்விற்கு உட்பட கூடியவை இதனால் ஐந்தொகையில் தேய்வின் பெறுமதி கழித்த பின்னரான பெறுமதியே காட்டப்படும்.

அருவச்சொத்து

இவை பௌதீக தன்மை குறைந்த கண்ணால் காணவொண்ணாத சொத்தாகும்(Intangible assets).இவற்றில் காப்புரிமை,விற்பனை குறியீடு,நன்மதிப்பு என்பன உள்ளடக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொத்து&oldid=128520" இலிருந்து மீள்விக்கப்பட்டது