பூதஞ்சேந்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நாற்பது வெண்பாக்கள் கொண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று
நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று
எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று
எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று

12:43, 5 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இன்று 41 வெண்பாக்கள் இருக்கின்றன. முதற்பாட்டு கடவுள் வாழ்த்து. சிவன், திருமால், நான்முகன் மூவரையும் வாழ்த்துகின்றது. இவ்வாழ்த்து பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் பூதஞ்சேந்தனார். இவர் இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இந் நூலாசிரியரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர்.

இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பெற்று வாழ்வதற்கான நல்லறங்களைக் கூறுகின்றன. பெரும்பாலான வெண்பாக்களில் மூன்று செய்திகள்தாம் சொல்லப்படுகின்றன. சில சிறந்த நீதிகள் இதில் உண்டு. இவ்வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவையல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக்கூடியவை. மோனையும், எதுகையும் அமைந்த அழகிய வெண்பாக்கள், சில பஃறொடை வெண்பாக்களும் இதில் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதஞ்சேந்தனார்&oldid=1080326" இலிருந்து மீள்விக்கப்பட்டது