சிட்ரஸ் கேன்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிட்ரஸ் கேன்கர் (Citrus canker) என்னும் நோய் சிட்ரசு வகைத் தாவரங்களை பாதிக்கும் ஒரு நோயாகும். இது ஸாந்தோ மோனாஸ் சிட்ரி என்னும் பாக்டீரியாவினால் உருவாகிறது.  இந்த நோய்த்தாக்குதலால் சிட்ரசு மரங்களின் இலை, தண்டுகள், முட்கள், பழங்களான, ஆரஞ்சு திராட்சை ஆகியவற்றில் காயங்களையும், குரங்கு போன்ற பழுப்பு நிறப்பகுதிகளை உருவாக்குகிறது. மேலும் இதனால் தாவரங்கள் பெருமளவு பாதிப்புக்கு ஆளாகின்றன. இதனால் இலைகளும், பழங்களும் முன்கூட்டியே உதிரும் நிலை ஏற்படுகிறது. இப்பழங்களை உண்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இதனால் சந்தையில் பழங்களின் விலை குறைகிறது.

நோய் தடுக்கும் முறைகள்[தொகு]

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மரத்தின் கிளைகளை அகற்றி முழுவதுமாக எரிப்பதாலும், வேப்பங்கட்டிகளைத் தெளிப்பதாலும் நோய் பரவுதலைத் தடுக்கலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. நக்கீரன் இயா்புக் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரஸ்_கேன்கர்&oldid=3341098" இலிருந்து மீள்விக்கப்பட்டது