சாளர அடிப்பாளம்
Appearance
சாளர அடிப்பாளம் (SILL SLAB) என்பது சாளரத்தின் கீழ் மட்டத்தில் சுவரில் மூன்று அங்குல கனத்துக்கு இடப்படும் கான்கிரீட் வாற்பு ஆகும். இதந்த காங்கிரீட் வாற்பானது சாளர இடைவெளியைத் தாண்டி முக்கால் அடிவரையில் இடப்படும். புதியதாக கட்டப்பட்ட வீட்டின் சாரளத்தின் கீழ்புற மூலைகளில் 45 பாகை கோணத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க இந்தக் கட்டுமானம் உதவுகிறது. சாளரத்துக்காக விடப்பட்ட இடைவெளியின் ஓரத்தில் உள்ள செங்கல் கட்டுமானத்தின் மீது சாளர இடைவெளிக்கு மேல் உள்ள கட்டிடத்தின் ஒட்டுமொத்த எடையும் நேரடியாக அங்கு இறங்குவதால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாங்காமல் இந்த விரிசல் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் சாளர அடிப்பாளம் அமைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எம். செந்தில்குமார் (13 அக்டோபர் 2018). "கட்டுமானம் என்னும் அறிவியல்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]சாளர அடிப்பாளத்தின் தேவை என்ன யூடியூப் காணொளி