உள்ளடக்கத்துக்குச் செல்

சாமுவேல் சுமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமுவேல் சுமித்
Samuel Smith
பிறப்பு(1927-09-13)செப்டம்பர் 13, 1927
நியூயார்க்கு நகரம்
இறப்புசனவரி 6, 2005(2005-01-06) (அகவை 77)
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
பணிவேதியியலாளர்
அறியப்படுவதுசுகாட்சுகார்டு : இணை கண்டுபிடிப்பு

சாமுவேல் சுமித் (Samuel Smith) ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். 1927 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் நாள் இவர் பிறந்தார். 1952 ஆம் ஆண்டு இவர் 3எம் என்ற அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பாட்சி சேர்னேன் என்பவருடன் இணைந்து கூட்டாக சிகாட்சுகார்டு என்ற நிலையான நீர் விலக்கியைக் கண்டுபிடித்தார்[1].

வாழ்க்கை

[தொகு]

நியூயார்க் நகரில் சாமுவேல் சுமித் பிறந்தார். நியூயார்க் நகரக் கல்லூரியில் தனது இளம் அறிவியல் பட்ட்த்தையும் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலிருந்து அவரது பட்டமேற்படிப்பு பட்டத்தையும் பெற்றார். 1949 ஆம் ஆண்டில் இவர் 30 பொருள்களுக்கான அமெரிக்க காப்புரிமையை வைத்திருந்தார். 1998 ஆம் ஆண்டு 3எம் நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார். 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இறந்தார்.

புகழ்

[தொகு]

சுமித் புகழ்பெற்ற தேசிய கண்டுபிடிப்பாளர்கள் மன்றத்தில் ஓர் உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Patsy Sherman co-invented Scotchgard". StarTribune. February 13, 2008. http://www.startribune.com/obituaries/15596637.html?refer=y. பார்த்த நாள்: 2012-10-13. "In 1953, Sherman and Samuel Smith focused on an accident in a 3M lab, after an experimental compound dripped on someone's canvas tennis shoes and couldn't be cleaned off." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_சுமித்&oldid=3800620" இலிருந்து மீள்விக்கப்பட்டது