சாங்கி தொழிற் பூங்கா
சாங்கி தொழிற் பூங்கா (Changi Business Park) சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாங்கி பகுதியில் அமைந்துள்ளது. 1997, யூலையில் 66 எக்டேர்களில் ஜேட்டிசி கார்ப்பரேசனால் நிறுவப்பட்டது. ஜூரோங் கிழக்கில் அமைந்துள்ள பன்னாட்டுத் தொழிற் பூங்காவிற்கு அடுத்ததாக அமைக்கப்பட்டது. சாங்கி தொழிற் பூங்காவில் பல விதமான வணிக, மென்பொருள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவுகள் உள்ளன. சாங்கி வானூர்தி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது இப்பூங்கா. இதனால், போக்குவரத்துச் செலவுகள் குறைவாகின்றன. தென்கிழக்கு ஆசியாவின் பெரிய வியாபாரப் பூங்காவான சிங்கப்பூர் எக்சுப்போ இதற்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதில் மளிகைக் கடை, அலுவலகங்கள், உணவகங்கள் என வகைவகையான கட்டிடங்கள் அமைந்துள்ளன. யப்பானிய நிறுவனமான நகனோ கார்ப்பொரேசன் கட்டடப் பணியைச் செய்தது. முதலீட்டாளர்கள் ஜேட்டீசி கார்ப்பரேசன் நிறுவனத்திடம் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து தேவையான கட்டமைப்புகளை செய்து கொள்ளலாம்.
வெளியிணைப்புகள்
[தொகு]- சாங்கி பிசினசு பார்க் பற்றிய தளம் பரணிடப்பட்டது 2012-12-25 at Archive.today