உள்ளடக்கத்துக்குச் செல்

சவ்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவ்னர் என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு நகரம் மற்றும் தெஹ்ஸில் தலைமையகம் ஆகும். இந்த நகரம் சவ்னர் நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்றது.[1] இது நாக்பூர் நகரத்தில் இருந்து 36 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ளது. சவ்னர் கோலார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது . இது வரலாற்று ரீதியாகவும் புராண ரீதியாகவும் புகழ்பெற்ற இடமாகும்.

வரலாறு

[தொகு]

ஜெய்மனி அஸ்வமேத்தில் “சரஸ்வத்பூர்” என்ற பெயரில் சவ்னர் நகரம் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அதனுடன் பல புராணக்கதைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஹேமத்பந்தி சிவன் கோயில் என்றும் அழைக்கப்படும் பண்டைய சிவன் கோயில் கோலார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பண்டைய விநாயகரின் கோயில் பக்கத்து கிராமமான அதாச கிராமத்தில் ஒரு மலையில் அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு எதிரான வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சவ்னர் நகரின் பங்கின் காரணமாக வரலாற்று முக்கியத்துவத்தை பெறுகின்றது.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சவ்னர் நகரில் 42,000 மக்கள் வசித்தனர். மக்கட் தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் உள்ளனர். சவ்னர் நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 89% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 89% வீதமாகவும், பெண் கல்வியறிவு 88% வீதமாகவும் காணப்படுகின்றது. சவனர் நகரில் மக்கட் தொகையில் 14% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.[2]

காலநிலை

[தொகு]

சவ்னர் நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலையின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றது. இந்நகரத்தில் ஆண்டின் பெரும்பகுதி வறண்ட நிலைமைகளைக் கொண்டுள்ளது. சூன் மாதத்தில் சுமார் 163 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகும். சூலை மாதத்தில் மழையின் அளவு 294 மி.மீ ஆகவும், சூலை முதல் ஆகத்து வரை 278 மிமீ ஆகவும், செப்டம்பரில் 160 மிமீ ஆகவும், பின்னர் மழைவீழ்ச்சியின் அளவு படிப்படியாக குறைகின்றது. கோடை காலம் மிகவும் வெப்பமாக காணப்படும். மேலும் மார்ச் முதல் சூன் வரை நீடிக்கும். மே மாதமானது வெப்பமான மாதமாகும். குளிர்காலம் நவம்பர் முதல் சனவரி வரை நீடிக்கும். இதன் போது வெப்பநிலை 10 °C (50 °F) இற்கும் குறைகிறது.[3] நகரத்தில் மிக உயர்ந்த வெப்பநிலை 19 மே 2015 அன்று 48 °C ஆக இருந்தது. மிகக் குறைவானது 3.9C ஆக பதிவாகியுள்ளது. கோடை காலம் இடியுடன் கூடிய மழை , தூசி புயல்கள் , ஆலங்கட்டி மழை மற்றும் புயல் போன்ற கடுமையான வானிலை நடவடிக்கைகளால் வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக, ஆலங்கட்டி மழை மார்ச் மாதத்திலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தூசி புயல்களும் ஏற்படுகின்றன. இவை அரிதாகவே நிகழ்கின்றன.[3]

பொருளாதாரம்

[தொகு]

நிலக்கரிச் சுரங்கங்கள் , ஜவுளி மற்றும் காகிதத் தொழில் என்பவை பொருளாதாரத்தில் பங்கு வகிக்கின்றன. சவ்னர் நகர மக்களின் முதன்மை தொழில் விவசாயம் ஆகும். இந்த நகரம் ராம்தேக் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாகும். உள்ளூர் மொழிகளாக மராத்தி மற்றும் இந்தி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. நகரின் பெரும்பாலான பாலங்கள் மற்றும் அரசாங்க கட்டிடங்கள் 1930 ஆண்டுகளின் பிற்பகுதியில் பிரித்தானிய அரசாங்கத்தால் கட்டப்பட்டன. டபிள்யூ.சி.எல். வாராந்திர சந்தை வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும்.

சான்றுகள்

[தொகு]
  1. "Nagpur District Collectorate". web.archive.org. 2009-04-10. Archived from the original on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. 3.0 3.1 "Climate" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்னர்&oldid=3586862" இலிருந்து மீள்விக்கப்பட்டது