சர்லி ஜாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்லி ஜாக்சன்
அமெரிக்க அதிபரின் தேசிய நுண்ணறிவு ஆலோசனை வாரியத் தலைவர்
பதவியில்
ஆகஸ்ட் 29, 2014 – ஜனவரி 20, 2017
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
முன்னையவர்டேவிட் போரன்
சக் ஹேகல்
பின்னவர்ஸ்டீவ் ஃபீன்பெர்க்
ரென்ஸ்செலீர் பல்தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜூலை1, 1999
முன்னையவர்Cornelius Barton
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 5, 1946 (1946-08-05) (அகவை 77)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
துணைவர்மோரீஸ் வாஷிங்டன்
கல்விமாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (BS, MS, PhD)
இணையத்தளம்Official website

ஷர்லி ஆன் ஜாக்சன், (Shirley Ann Jackson, ஆகஸ்ட் 5, 1946) ஐக்கிய அமெரிக்காவின் இயற்பியலாளர் ஆவார். இவர் ரென்ஸ்செலீர் பல்தொழிநுட்ப நிறுவனத்தின் பதினெட்டாவது தலைவர். இவர் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார்.[1] ஐக்கிய அமெரிக்காவில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர் இவர்.[2] மேலும் தேசிய அறிவியல் பதக்கம் வென்ற முதல் நபரும் ஆவார்.

இளமை[தொகு]

சர்லி ஜாக்சன் அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.-இல் பிறந்தார் இவருடைய பெற்றோர்கள் கியார்கு ஜாக்சன் - பீட்ரீஸ் ஆவர். நன்முறையில் நன்னெறி மற்றும் பள்ளிக்கல்வி பயின்றார். ஜாக்சனின் அறிவியல் ஆர்வத்தைக் கண்ட தந்தை, அவருடைய அறிவியல் செயல் திட்டங்களுக்கு உதவிபுரிந்து ஊக்கமூட்டினார். ரூஸ்வெல்ட் சீனியர் உயர்நிலைப் பள்ளியில் கணிதம், அறிவியல் ஆகிய இரண்டிலும் வரிசையாகப் பல திட்டங்களில் கலந்துகொண்டார். 1964 இல் அனைத்து வகுப்புகளிலும் முதன்மைபெற்று சிறந்த மாணவியாகப் பட்டம் பெற்றார்.[3]

1964 இல் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்தார். அப்பொழுது படித்துக் கொண்டிருந்த மாணவர்களில் ஒருசிலரே ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள். அவர்களில் சர்லி ஒருவரே கோட்பாட்டு அறிவியல் படித்துக் கொண்டிருந்தவராவார். இவர் மாணவியாக இருக்கும் போதே போஸ்டன் சிட்டி மருத்துவமனையில் தன்னார்வலராகப் பணிபுரிந்தார். மேலும் ராக்ஸ்பரி YMCA மாணவர்களுக்கு கல்வி போதிக்கவும் செய்தார்.[3] 1968 இல் திண்மப்பொருள் இயற்பியல் என்ற ஆய்வு செய்து இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.[4]

ஜாக்சன் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் தனது முனைவர் பட்ட படிப்பு பயில தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் பல ஆபிரிக்க அமெரிக்க மாணவர்கள் இந்த நிறுவனத்தில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினார். அடிப்படைத் துகள் கோட்பாட்டு பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஜாக்சன் 1973 இல் அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.அவரது ஆய்வுக்கு வழிகாட்டி உதவியவர் ஜேம்ஸ் யங் ஆவார்.[3] சர்லி ஜாக்சன், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆபிரிக்க அமெரிக்க பெண் ஆவார். மேலும் ஐக்கிய அமெரிக்காவில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற இரண்டாவது ஆபிரிக்க-அமெரிக்க பெண்மணியும் ஆவார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Appiah, Kwame Anthony; Gates Jr, Henry Louis (March 16, 2005) (in en). Africana: The Encyclopedia of the African and African American Experience. Oxford University Press. பக். 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195170559. https://books.google.com/books?id=TMZMAgAAQBAJ&pg=RA2-PA333. 
  2. 2.0 2.1 Svitil, Kathy A. "The 50 Most Important Women in Science". Discover Magazine. Kalmbach Publishing Co. பார்க்கப்பட்ட நாள் December 15, 2014.
  3. 3.0 3.1 3.2 Williams, Scott. "Physicists of the African Diaspora". பார்க்கப்பட்ட நாள் December 31, 2009.
  4. "Shirley Ann Jackson superconductors" (PDF). USFSP. பார்க்கப்பட்ட நாள் May 2, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்லி_ஜாக்சன்&oldid=2894242" இலிருந்து மீள்விக்கப்பட்டது