உள்ளடக்கத்துக்குச் செல்

சரடோகா உணவு விடுதி வெடிவிபத்து

ஆள்கூறுகள்: 23°08′01″N 82°21′29″W / 23.13361°N 82.35806°W / 23.13361; -82.35806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரடோகா உணவு விடுதி வெடிவிபத்து
Hotel Saratoga explosion
2014 ஆம் ஆண்டில் சரடோகா உணவு விடுதி
நாள்மே 6, 2022
இடம்சரடோகா உணவு விடுதி
அமைவிடம்அவானா, இலா அபானா மாகாணம், கியூபா
புவியியல் ஆள்கூற்று23°08′01″N 82°21′29″W / 23.13361°N 82.35806°W / 23.13361; -82.35806
காரணம்வாயு கசிவு[1]
இறப்புகள்43
காயமுற்றோர்97
காணாமல் போனோர்≥3

சரடோகா உணவு விடுதி வெடிவிபத்து (Hotel Saratoga explosion) 2022 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. இந்த ஐந்து அடுக்கு சொகுசு உணவு விடுதி கியூபாவின் இலா அபானா மாகாணத்திலுள்ள பழைய அவானா நகராட்சியில் அமைந்துள்ளது. புதிய மரபுவழி பாங்கில் கட்டப்பட்டிருந்த சரடோகா உணவு விடுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிவிபத்து நிகழ்ந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தின் விளைவாக கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகளும் சுற்றியுள்ள கட்டமைப்பும் சேதமடைந்தன.[2][3] குறைந்தது நாற்பத்து மூன்று பேர் இறந்தனர். மேலும் தொண்ணூற்று ஏழு பேர் காயமடைந்தனர்.[4] வெடிப்பு நேரத்தில் உணவு விடுதி புனரமைப்புக்கு உட்பட்டிருந்தது என்பதால் இங்கு விருந்தினர்கள் யாரும் இல்லை. இருப்பினும், புனரமைப்பு பணியில் ஐம்பத்தொரு தொழிலாளர்கள் இருந்தனர்.[5]

உணவு விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு தாங்கி வாகனம் தீப்பிடித்ததாக நம்பப்படுகிறது. வாகனத்தின் அடுத்தடுத்த வெடிப்பு காரணமாக கட்டிடத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளை அழிந்தன. அறியப்பட்ட இறந்தவர்களில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் ஒரு எசுப்பானிய சுற்றுலாப் பயணியும் இருந்துள்ளனர்.[6][7]

பின்னணி

[தொகு]

வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து நட்சத்திர உணவு விடுதியான சரடோகா, கியூபா தலைநகரில் உள்ள பாசியோ டெல் பிராதோ மற்றும் திராகோனசு தெருக்களின் சந்திப்பில், புவென்டே டி லா இந்தியா என்ற நீரூற்றுக்கு முன்னால் அமைந்துள்ளது. விடுதியாக மாறிய கட்டடம் ஆரம்பத்தில் மூன்று மாடிகளாக இருந்தது. 1880 ஆம் ஆண்டில் தரை தளத்தில் புகையிலை கிடங்கு, இரண்டாவது மாடியில் அடுக்குமாடி குடியிருப்புகள், மூன்றாவது மாடியில் விடுதி அறைகள் என கட்டப்பட்டது. இந்த கட்டடம் 1879 ஆம் ஆண்டில் பணக்கார எசுப்பானிய வணிகர் யூகெனியோ பலாசியோசால் நிறுவப்பட்டது. முதலில் மான்டே தெருவில் அமைந்திருந்தது. கட்டிடத்தின் மைய இடமும் அழகிய காட்சிகளும் பன்னாட்டு பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. 1933 ஆம் ஆண்டில் கட்டடம் ஒரு உணவு விடுதியாக மறுவடிவமைக்கப்பட்டு தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கியூபப் புரட்சியைத் தொடர்ந்து, விடுதி புதிய பொதுவுடமை அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டது. பின்னர் மோசமான நிலைமைகள் காரணமாக மூடப்பட்டதற்கு முன்பாக இது குறைந்த வகுப்பு வீட்டு வசதி பகுதியாக மாறியது. 1996 ஆம் ஆண்டில் கட்டடம் கூட்டாக நகர வரலாற்றாசிரியர் அலுவலகம் மற்றும் முதலீட்டாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு ஆகியவற்றின் வணிகப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அசல் கட்டடத்தின் பெரும்பகுதி பின்னர் இடிக்கப்பட்டது. இரண்டு தெருக்களில் முகப்பு மட்டும் இருந்தது. இந்த கட்டடம் ஐந்து மாடிகள் மற்றும் இரண்டு அடித்தள நிலைகளுடன் புனரமைக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.[8][9]

விடுதியில் அடிக்கடி முக்கிய பன்னாட்டு அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கு தங்குமிடமாக இருந்து வந்தது. ஆனால் தேசிய மற்றும் பன்னாட்டு பயணங்கள் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் காரணமாக நாட்டின் முக்கிய சுற்றுலாத் துறை தள்ளாடிக் கொண்டிருந்தது. மேலும், சமீபத்தில் உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பு காரணமாக உருசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு கியூபாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உருசியர்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.[10].

வெடிவிபத்து

[தொகு]

விடுதியில் எரிவாயு கசிவு இருந்ததால் வெடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. வெடித்த நேரத்தில் கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த எரிவாயு தாங்கி வாகனம் நின்றிருந்த காரணத்தால் தோன்றியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. வெடிப்பு கட்டிடத்தின் முழு பகுதிகளையும் அழித்தது. எல் கேபிடோலியோ, தீட்ரோ மார்டி திரையரங்கம் மற்றும் கல்வாரி தேவாலய சங்கத்தின் மேற்கு கியூபா தலைமையகம் போன்ற அருகிலுள்ள கட்டடங்களையும் சேதப்படுத்தியது. கட்டடத்தின் சில பகுதிகள் தெருவில் இடிந்து விழுந்தன. கார்கள் மற்றும் மக்கள் நசுங்கினர். குப்பைகள் காற்றில் பறந்தன. கட்டடம் அனைத்தும் அழிக்கப்படாததால், மீதமுள்ள அறைகள் சேதமடைந்திருப்பதைக் தெருவில் இருந்து காண முடிந்தது.[11]

உயிரிழப்புகள்

[தொகு]

இவ்வெடிவிபத்தின் காரணமாக மொத்தம் 43 பேர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சாதகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கியூபாவின் குடிமக்கள் ஆவர். ஒரு எசுப்பானிய சுற்றுலாப் பயணியும் இங்கிருந்துள்ளார். இறந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண், நான்கு வாலிபர்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். பல குழந்தைகள் உட்பட 97 பேர் காயமடைந்தனர்.[7] அந்த நேரத்தில் விடுதியில் பணிபுரிந்த 51 பேரில் 23 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 3 பேரை இன்னும் காணவில்லை.[12]

விளைவுகள்

[தொகு]

கியூபாவில் இருந்து அவசரகால பணியாளர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள், அந்த இடத்தை தோண்டியெடுப்பதற்கும், உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்து கண்டறிவதற்கும், உடல்களை மீட்டெடுப்பதற்கும் விரைவாகப் பணியாற்றினர்.

கியூபாவின் சனாதிபதி மிகுவல் டியாசு-கனெல் வெடிப்பு நடந்த அதே நாளில் அந்த இடத்தைப் பார்வையிட்டார். எர்மனோசு அமீகிராசு மருத்துவமனைக்குச் சென்று உயிர் பிழைத்தவர்களைப் பார்வையிட்டார். விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.[13]

மெக்சிகோ நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட்டு போன்ற நபர்களிடமிருந்து ஆதரவு செய்திகள் வந்தன. அவானாவுக்கான பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலாளர், இலூயிசு அன்டோனியோ டோரசு இரிபார், வெடிப்பினால் 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அருகில் உள்ள ஒரு கட்டடம் இடிக்கப்பட வேண்டும் என்றும், 95 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. de Córdoba, José (2022-05-06). "Cuba Hotel Explosion: At Least Nine Dead in Blast at Havana's Hotel Saratoga" (in en-US). The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 6 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220506220806/https://www.wsj.com/articles/blast-in-cuba-tears-through-havanas-iconic-hotel-saratoga-11651855524. 
  2. "Death toll from explosion at Havana hotel rises to 40". AP NEWS (in ஆங்கிலம்). 2022-05-09. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  3. Rodriguez, Andrea (2022-05-08). "Havana Hotel Death Toll Rises to 30 as Dogs Search for Survivors". TIME. Archived from the original on 2022-05-14. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  4. Minsap, Redacción (2022-05-11). "Información actualizada sobre el estado de los lesionados en el accidente del hotel Saratoga". Ministerio de Salud Pública. https://salud.msp.gob.cu/informacion-actualizada-sobre-el-estado-de-los-lesionados-en-el-accidente-del-hotel-saratoga-11/. 
  5. "Desperate search for survivors in Cuba hotel explosion as death toll rises to at least 27". www.cbsnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  6. "Saratoga Hotel: 26 dead after huge explosion in Havana" (in en-GB). BBC News. 2022-05-07. https://www.bbc.com/news/world-latin-america-61358186. 
  7. 7.0 7.1 Minsap, Redaccion (2022-05-09). "Información actualizada sobre el estado de los lesionados en el accidente del hotel Saratoga". Ministerio de Salud Pública. https://salud.msp.gob.cu/informacion-actualizada-sobre-el-estado-de-los-lesionados-en-el-accidente-del-hotel-saratoga-7/. 
  8. Zenaida, Sánchez (2022-05-06). "Hotel "Saratoga"". Habana Radio. http://www.habanaradio.cu/articulos/edificio-en-la-esquina-de-paseo-del-prado-y-dragones/. 
  9. "History | Saratoga Hotel Havana". Saratoga Hotel (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  10. "Hotel Saratoga Havana explosion death toll climbs to 35, including 4 minors and a pregnant woman" (in அமெரிக்க ஆங்கிலம்). CBS News. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  11. "Death toll from explosion at Havana hotel rises to 40". AP NEWS (in ஆங்கிலம்). 2022-05-09. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.
  12. 12.0 12.1 "The death toll rises to 42 after an explosion at a hotel in Cuba" (in en). NPR. Associated Press. 2022-05-10. https://www.npr.org/2022/05/10/1098011546/cuba-hotel-explosion. 
  13. "Hotel Saratoga: At least 30 dead after a massive explosion destroyed a hotel in Havana, Cuba". News Digest Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-09. Archived from the original on 2022-05-14. பார்க்கப்பட்ட நாள் 2022-05-10.