சய் வான்
சயி வான் (Chai Wan) என்பது ஹொங்கொங், ஹொங்கொங் தீவின் கடைசி முனைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் சவ் கெய் வான் நகரத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த நகரம் ஒரு முன்னாள் குடாப்பகுதியை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மாணப் பணிகளினால் விரிவடைந்ததாகும்.
இந்த நகரம் ஹொங்கொங் தீவின் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2001ம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் தொகை 186,505 ஆகும். இந்த சய் வான் நகரின் தெற்கில் இயற்கை மலைத்தொடர்கள் கூடிய செக் ஓ தேசியப் பூங்கா உள்ளது.
வரலாறு
[தொகு]இன்று சயி வான் நகரம் முன்னாள் ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்துள்ளது. 1845களில் பிரித்தானியரின் கைப்பற்றலின் பின்னர், பிரித்தானிய இராணுவத்தினரால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றும் சியு சாய் வான் எனும் இடத்தில் முகாம் ஒன்றும் 1980 வரையிலும் இருந்தன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நகரமயமாக்கல் திட்டங்களினால் அப்பகுதி மக்கள் நெரிசலான நகராக மாற்றம் பெற்றது.
1952களின் ஹொங்கொங் அரசாங்கம் வருமானம் குறைந்தோருக்கான வசிப்பிடத் தொகுதிகளை, இந்த சய் வான் கிராமங்களில் கட்டத்தொடங்கியது. தற்போது இந்த நகர் நூற்றுக்கணக்கான வானளாவிகள், வானுயர் குடியிருப்புத் தொகுதிகள் என வளர்ச்சியுடன் காணப்படுகின்றது. அத்துடன் எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை உட்படப் பல பேருந்து பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் இந்நகரம் கொண்டுள்ளது. பல பொதுப் போக்குவரத்துப் பாதைகளும், அதிவிரைவுப் பாதைகளும் இன்று இந்த நகரூடாகச் செல்கின்றன. சய் வான் பூங்கா எனும் அழகிய பூங்கா ஒன்றும் உள்ளது.