உள்ளடக்கத்துக்குச் செல்

சமையலறை நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமையலறை நூலகம் (Kitchen Library) கனடாவில் சமையலறை உபகரணங்களை கடன் கொடுக்கும் ஓர் இலாப நோக்கற்ற முதல் நூலகமாகும். இந்நூலகம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சமையலறை உபகரணங்களை சிறிய தொகையைப் பெற்றுக் கொண்ட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டொராண்டோ கருவி நூலகம் இடம் கொடுத்ததிலிருந்து சமையலறை நூலகம் இயங்கியது. உள்ளூர், தேசிய மற்றும் பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தையும் சமூக ஆதரவையும் சமையலறை நூலகம் பெற்றது. 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்நூலகம் யோங்கே மற்றும் எக்லின்டனுக்கு இடம் மாற்றப்பட்டது. அங்கு இவர்கள் உபகரணங்களை வழங்கினர். பட்டறைகளை ஏற்பாடு செய்து கற்பித்தனர். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று இந்நூலகம் மூடப்பட்டது. [1]

மக்கள் தொகை அதிகரித்து கொண்டே இருப்பதால் குடியிருப்புகளின் சராசரி அளவும் குறைகிறது. இடமும் வருமானமும் சமைப்பதற்கும் ஆரோக்கியமான உணவுக்கும் தடையாக இருக்கக்கூடாது என்று இவர்கள் கருதினர். விலையுயர்ந்த மற்றும் இடம் நுகரும் உபகரணங்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் எதிர்காலத்திற்காக இவற்றை எளிதாக பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நகரத்தை உருவாக்கலாம் எனவும் கருதினர்.

2014 ஆம் ஆண்டில், கனடியன் லிவிங்கு என்ற பத்திரிகை வாழ்க்கையை சிறப்பாகச் செய்யும் 7 கனடிய கண்டுபிடிப்புகளில் ஒன்று என இதை அடையாளங் காட்டியது.[2] டொராண்டோ லைஃப், [3] தி டொராண்டோ இசுட்டார், [4] தி நேசனல் போசுட்டு, [5] மற்றும் சிபிசி செய்திகள் போன்ற பத்திரிகைகளும் இச்செய்தியை வெளியிட்டன. [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dayna Boyer (September 1, 2016). "We're Closed". The Kitchen Library. Archived from the original on 2016-11-03. பார்க்கப்பட்ட நாள் 26 October 2016.
  2. "7 Canadian inventions to make your life better". Canadian Living. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
  3. Caroline Youdan (October 21, 2013). "Toronto now has a lending library for kitchen appliances". Toronto Life. Archived from the original on 25 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
  4. Graham Slaughter (Oct 18, 2013). "Need a pricey kitchen gadget? There's a library for that". The Star. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
  5. Amy Stubbs (November 29, 2013). "How to borrow, share and learn your way to a home-cooked meal". The National Post. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
  6. Janet Davidson (Apr 18, 2014). "Share a juicer, your dog or a room in your home? How the sharing economy took off". CBC News. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமையலறை_நூலகம்&oldid=3607327" இலிருந்து மீள்விக்கப்பட்டது