உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டியூர் நல்லந்தையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டியூர் நல்லந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது.[1]

பெயர் விளக்கம்[தொகு]

அந்துவன் என்பது ஆண்பால் பெயர். அதன் பெண்பால் பெயர் அந்தை.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

தலைவனுக்கும் தலைவிக்கும் தொடர்பு. திருமணம் பற்றிப் பேச்சே எழவில்லை. தலைவி மருண்டுபோயிருக்கிறாள். ஆண் இறால் மீனைப்போல மருண்டுபோயிருக்கிறாள். இறால் ஏன் மருண்டது? கருங்கால் குருகு ஒன்று பற்றும்போது தப்பிப் பிழைத்துத் தாழை மரத்துக்கடியில் ஒண்டியது. அங்கே இருந்த தாழம்பூவைப் பார்த்து இதுவும் குருகோ என எண்ணி மருண்டுகொண்டிருந்தது. அந்தக் குருகு மருள்வது போலத் தலைவி மருள்கிறாளாம்.

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல்
    ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
    கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
    கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
    முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, 5
    எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
    துறு கடற் தலைய தோடு பொதி தாழை
    வண்டு படு வான் போது வெரூஉம்
    துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

    வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது. நற்றிணை 211.