கெனாதி பிசுநோவதி-கோகன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கெனாதி எஸ். பிசுநோவதி-கோகன் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 6, 1941 மிக்கய்லோவ்கா, சாரதோவ் மண்டலம், உருசியா |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | பேராசிரியர், உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மாஸ்கோ |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்ப நிறுவனம் கெல்திசு பயன்முறைக் கணிதவியல் நிறுவனம் |
கெனாதி எஸ். பிசுநோவதி-கோகன் (Gennady S. Bisnovati-Kogan) ஓர் உருசிய வானியற்பியலாளர். இவர் இரும துடிவிண்மீன்களை முன்கணித்த்தற்காகப் பெயர்பெற்றவர்.
இவர் 1958 முதல் 1964 வரை மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவராக இருந்தார். இவர் 1964 முதல் 1967 வரை மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்ப நிறுவனத்திலும் கெல்திழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனத்திலும் மேற்பட்ட மாணவராகப் பயின்றார்.
இவரது முனைவர் பட்டத் தலைப்பு "விண்மீன் படிமலர்ச்சியின் பிந்தையா கட்டங்கள்" (1968, கெல்திழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனம்) என்பதாகும். இவரது முதுமுனைவர் பட்ட்த் தலைப்பு "விண்மீன்கள், உடுக்கண அமைப்புகளின் சமனிலையும் நிலைப்பும்" (1977, உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) என்பதாகும்).
இவர் 1967 முதல் 1974 வரை இளநிலை அறிவியல் ஆய்வாளராக இருந்தார். பின்னர் 1974 இல் இருந்து உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.