குழல் கால்கள்
குழல்கால்கள் (Tube feet) ( நுட்பமாக, கால்நீட்சிகள்) என்பன முட்தோலிகளின் வாய்ப்புறச் செயலுறு குழல் வடிவ நீட்சிகளாகும், இது உடுமீனின் கைகளாகவோ, கடல்மூரைகளின், மணலூரிகளின், கடல்வெள்ளரிகளின் அடிப்புற நீட்சியாகவோ அமைகின்றன; இவை இறகுமீன்களில் தனிநீட்சிக்களாக உணவூட்டத்துக்கு மட்டும் பயன்படுகின்றன. இவை நீர்குழலைப்பின் பகுதிகளாக உள்ளன.[1]
கட்டமைப்பும் செயல்பாடும்
[தொகு]குழல் கால்கள் நீந்தவும் உணவூட்டம் பெறவும் மூச்சுயிர்க்கவும் பயன்படுகின்றன. உடுமீன்களில் குழல்கால்கள் கைக் காடிகளின் நெடுக அமைக்கப்பட்டுள்ளனளிவை நீரியல் அழுத்தத்தால் இயங்குகிறன. அவை மேர்பரப்புகலில் இணைந்து தம் நடுப்பகுதி ஊடாக உணவை வாய்க்குக் கொண்டு செல்கின்றன. தலைகீழாக கவிழ்ந்த உடுமீன் ஒருகையை மேலே தூக்கி திண்பொருளின்புறப்பரப்பில் தொற்றிக்கொண்டு மேலே நெம்பி எழும்பும். குழல்கால்கள் இவ்வகையான வேறுபட்ட விலங்குகள் வ்கடல் தரையில் ஒட்டிக்கொள்ளவும் மெல்ல இயங்கவும் உதவுகின்றன.
ஒவ்வொரு குழல்காலிலும் பிதுக்கப்பை, கால்நுனி என இருபகுதிகள் உள்ளன. பிதுக்கப்பை என்பது விலங்குடலின் நீர்நிரம்பிய பையாகும். இதில் வட்டத் தசைகளும் நெடுக்குவாட்டத் தசைகளும் உள்ளன. கால்நுனி உடலின் குழல் வடிவ நீட்சிக் கட்டமைப்பாகும். இதில் நெடுக்கு வாட்டத் தசைகள் மட்டுமே உள்ளன. பிதுக்கப்பை தசை சுருங்கும்போது, அதில் இருந்து நீர் கால்நுனிக்குள் பிதுக்கப்படுகிறது. இதனால் கால்நுணி நீளும். கால்நுணிசூழ் தசைகள் சுருங்கும்போது, அவை நீரைப் பிதுக்கப்பைக்குள் மீளச் செலுத்துகின்றன.அப்போது கால்நுனி சுருங்கும். கால்நுனிகள் அடிப்பகுதியில் இணைய வேதிம ஒட்டுபொருளைப் பயன்படுத்துகின்றன( உறிஞ்சலை அன்று).[2] [3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Morphology". Echinodermata. University of California Museum of Paleontology.
- ↑ Mah, Christopher L. (January 29, 2013). "Echinoderm Tube Feet Don't Suck! They Stick!". Echinoblog.
- ↑ Smith, J. E. (1937). "The structure and function of the tube feet in certain echinoderms". Journal of the Marine Biological Association of the United Kingdom 22 (1): 345–357. doi:10.1017/S0025315400012042. http://sabella.mba.ac.uk/966/01/The_structure_and_function_of_the_tube_feet_in_certain_echinoderms.pdf.
- ↑ Mooi, R. (1986). "Non-respiratory podia of clypasteroids (Echinodermata, Echinoides): I. Functional anatomy". Zoomorphology 106: 21–30. doi:10.1007/bf00311943.