உள்ளடக்கத்துக்குச் செல்

குன்லா பஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனசாகர் குன்லா பஜன் இசைக்குழு - காத்மண்டு.
ஆசன் குன்லா பஜன் இசைக்குழு
தெபகா குன்லா பஜன் இசைக்குழு

குன்லா பஜன் (Gunla Bajan) நேபாளத்தின் நேவார் மக்களால் இசைக்கப்படும் புத்த பக்தி இசை ஆகும். [1] "குன்லா" என்பது நேபாள சம்பத் நாட்காட்டியில் பத்தாவது மாதத்தின் பெயராக உள்ளது, இது கிரிகோரியன் நாட்காட்டியில் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திருக்கிறது. மேலும், "பஜன்" என்றால் "இசை" அல்லது மக்கள் குழுவாக சேர்ந்து பாடல்கள் பாடுவது என்று பொருள் படுகிறது. [2]

குன்லா என்பது நேவார் பௌத்த சமூகத்தினருக்கு [3] புனிதமான மாதமாகும் .புனித மாதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் புத்தரின் காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது. துறவிகள் ஒரே இடத்தில் தங்கி, உள்ளூர் மக்களுக்கு தர்மத்தைக் கற்பித்த காலத்திலிருந்தே இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. [4]

நிகழ்ச்சிகள்

[தொகு]

வட்டாரம் அல்லது சாதி அடிப்படையிலான சங்கங்கள், அதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் குன்லா பஜன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். இந்தக் குழுக்கள் பொது நிகழ்ச்சிகளின் வருடாந்திர நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன. அவர்கள் இசை பாடங்களை நடத்துகிறார்கள். மேலும், இது தொடர்பான மத விழாக்கள், பாடல் பாடும் அமர்வுகள், விருந்துகளை நடத்துகிறார்கள். [5]

குன்லாவின் போது சுயம்புநாதர் கோயில் மற்றும் பிற பௌத்த தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதை இவர்கள் பின்பற்றுகின்றனர். குன்லா இசையை வாசிக்கும் போது தினசரி யாத்திரை மேற்கொள்வது ஆண்டின் மிக முக்கியமான செயல்பாடாக கருதப்படுகிறது. புனித மாதத்தின் முக்கிய நாட்கள் 'பஹித்யா ஸ்வாஹ்வானேகு' எனப்படுகிறது. குன்லா இசையை வாசிக்கும் பக்தர்கள் புனித முற்றங்களுக்குச் சென்று திருவிழாவிற்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பஹித்யா ( திபங்கர புத்தர் ) மற்றும் பௌபா ஓவியங்களை வணங்குகின்றனர். [6] மேலும், 'நிசாலா சாவானேகு' எனப்படும் சுயம்புவிற்கு பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது, அதன் சுற்றுப்புறங்களில் கச்சேரிகள் நடைபெறுகிறது. நேபாள புத்தாண்டு தினத்தின் போது குன்லா இசைக் குழுக்கள் ஊர்வலங்களை நடத்துகின்றன.

இசை

[தொகு]

குன்லா இசையின் ஒரு நிகழ்ச்சி [7] தெய்வங்களுக்கு ஒரு சிறிய வணக்கமான தியா லயேகுவுடன் தொடங்குகிறது. ஊர்வலம் செல்லும்போதும், கோயிலின் சன்னதியைச் சுற்றிச் செல்லும்போதும், பாலத்தைக் கடக்கும்போதும் தனித்தனி இசைக் குரல்கள் ஒலிக்கின்றன. இவை லாவந்தா, ச்வோ, கிரஹா, அஸ்டார், பாலிமா மற்றும் பார்ட்டால் என அழைக்கப்படுகின்றன.

ஊர்வலங்களின் போது, இசைக்கலைஞர்கள் பொதுவாக பருவகால பாடல்கள் அல்லது பிற பாரம்பரிய பாடல்களை டிரம்ஸ் மற்றும் சைம்பல்களால் ஆதரிப்பார்கள். நவீன பிரபலமான பாடல்களும் இசைக்கப்படுகின்றன.

குவாரா என்பது கோயில் சதுக்கங்கள் மற்றும் புனித முற்றங்களில் இசைக்கலைஞர்கள் வட்டமாக நின்று இசைக்கப்படும் ஒரு நீண்ட இசைப் பகுதி ஆகும். இது 15 முதல் 20 நிமிடங்கள் நடைபெறுகிறது. இதில், அன்னபூர்ணா குவாரா, ஸ்வேத்காலி குவாரா மற்றும் சங்கின் குவாரா பிரபலமானவையாக கருதப்படுகிறது.

கருவிகள்

[தொகு]

குன்லா இசையின் முக்கிய கருவியான "தா" என்று அழைக்கப்படும் இரட்டை பக்க டிரம் காத்மாண்டு பள்ளத்தாக்கில் 2,000 ஆண்டுகளாக இசைக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இது, குட்டைக் குச்சியால் இடது பக்கமும் கையால் வலது பக்கமும் அடிக்கப்படுகிறது.

தற்போது, இசையை வாசிக்க எக்காளம் மற்றும் கிளாரினெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில், "வாஹாலி" மற்றும் "பசூரி" (बासुरि) என அழைக்கப்படும் உள்ளூர் காற்றுக் கருவிகள் இசையை வழங்கின.

மற்ற கருவிகள் "தா" மற்றும் "புஸ்யா" முறையே சிறிய மற்றும் பெரிய சங்குகள் ஆகும். "நாய்கிம்" என்பது சிறிய டிரம் , "சுஸ்யா" எனப்படும் சிலம்பங்கள், "பம்யதா" என்பது ஒரு நீண்ட எக்காளம் [8] [9]போன்ற தனித்தனியான கருவிகள் இந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன.

சான்றுகள்

[தொகு]
  1. Lewis, Todd T. (January 1996). "Notes on the Uray and the Modernization of Newar Buddhism". Contributions to Nepalese Studies. http://www.thlib.org/static/reprints/contributions/CNAS_23_01_08.pdf. பார்த்த நாள்: 4 January 2012.  Page 111.
  2. Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013. Page 328.
  3. Locke, John K. (2008). "Unique Features of Newar Buddhism". Nagarjuna Institute of Exact Methods. Archived from the original on 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 5 January 2012.
  4. LeVine, Sarah and Gellner, David N. (2005) Rebuilding Buddhism: The Theravada Movement in Twentieth-Century Nepal. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-01908-9. Page 64. Retrieved 5 January 2012.
  5. "Music of Buddha". The Himalayan Times. 5 August 2011 இம் மூலத்தில் இருந்து 10 செப்டம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110910095612/http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Music+of+Buddha&NewsID=298298. பார்த்த நாள்: 4 January 2012. 
  6. Locke, John Kerr (1985) Buddhist Monasteries of Nepal: A Survey of the Bahas and Bahis of the Kathmandu Valley. Kathmandu: Sahayogi Press. Page 408.
  7. University of New Mexico, Laboratory of Anthropology (Museum of New Mexico) (1960). "Gunla Baja". Journal of Anthropological Research, Volume 16 (University of New Mexico). https://books.google.com/books?id=NqIRAAAAIAAJ&q=gunla+bajan. பார்த்த நாள்: 5 January 2012.  Page 415.
  8. Lewis, Todd T. (Winter 1993). "Contributions to the Study of Popular Buddhism: The Newar Buddhist Festival of Gumla Dharma". Journal of the International Association of Buddhist Studies. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013. Page 328.
  9. Vajracharya, Madansen (1998). "Lokabaja in Newar Buddhist Culture". http://www.aioiyama.net/lrc/papers/cbhnm-ppr-12.htm. பார்த்த நாள்: 4 January 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்லா_பஜன்&oldid=3696636" இலிருந்து மீள்விக்கப்பட்டது