உள்ளடக்கத்துக்குச் செல்

குச்சி விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குச்சி விளையாட்டு என்பது எல்லா வயதினரும் விளையாடும் கைத்திறன் விளையாட்டு. விரல் நடுக்கம் இன்மையையும், பொறுமையையும் வெளிப்படுத்தும் விளையாட்டு.

விளக்குமாற்றில் உள்ள சீவங்குச்சிகள் சுமார் நான்கு அங்குல அளவுக்கு உட்பட்டனவாக ஒரே அளவில் 10 குச்சிகளும், அவற்றுடன் அவற்றைவிடச் சற்றே நீளமுள்ள குச்சி ஒன்றும், ஆக 11 குச்சிகள் இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும்.

11 குச்சியையும் ஒருசேரப் பிடித்து நிலத்தில் ஒரே வீச்சில் பரவலாக எறியவேண்டும். உள்ளங்கையால் உருட்டியும் போடலாம். சீழே விழுந்துகிடக்கும் குச்சிகளை பிற எந்தக் குச்சியும் அலுங்காவண்ணம் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்கவேண்டும். அப்படி எடுத்த குச்சிகளின் எண்ணிக்கை வெற்றிப்பள்ளிகளின் பழமாக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் எடுக்கும்மோது ஏதாவது ஒரு குச்சி அலுங்கினால் ஆட்டம் கைமாறும்.

சீவங்குச்சிகளுக்குப் பதிலாகத் தீக்குச்சிகளும் பயன்படுத்தப்படும்.

அலுங்காமல் எடுத்த ஒவ்வொரு குச்சிக்கும் ஒரு வெற்றிப்புள்ளி. பெரிய குச்சி எடுத்தால் 10 புள்ளி. இவ்வாறு புள்ளிகள் கணக்கிடப்பட்டுப் புள்ளிகள் கூட்டிக்கொள்ளப்படும். அதிக புள்ளிகள் பெற்றவர் வெற்றி.

படத்தொகுப்பு

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சி_விளையாட்டு&oldid=3187600" இலிருந்து மீள்விக்கப்பட்டது