கிழக்கு (வார இதழ்)
தலைமை ஆசிரியர் | ரா.ப.அரூஸ் |
---|---|
வகை | செய்திகள் மற்றும் கட்டுரைகள் |
இடைவெளி | வாரமொருமுறை |
நுகர்வளவு | 10000 |
வெளியீட்டாளர் | கே.ஐ.மீடியா குரூப் |
முதல் வெளியீடு | 2012 |
நிறுவனம் | கிண்ணியன் இன்டர்நெஷனல் பிரைவேட் லிமிட்டட் - கே.ஐ.மீடியா குரூப் |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
கிழக்கு (Kizhakku weekly) என்பது இலங்கையின் கொழும்பிலிருந்து வெளிவருகின்ற தேசிய வார இதழாகும். இந்த இதழானது இனநல்லுறவிற்கும் நீதிக்குமான மக்கள் குரல் (The peoples voice for racial harmony and justice) என்பதை முதன்மை வாக்கியமாகக் கொண்டு வெளிவருகின்றது. இந்த வார இதழின் பிரதம ஆசிரியராக ரா. ப. அரூஸ் கடமையாற்றுகிறார். இந்த இதழில் வெளியாகும் எந்த விளம்பரங்களிலும் பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்துவதில்லை எனும் உறுதிப்பாட்டுடன் நிருவாகம் செயற்பட்டு வருவதோடு பிற ஊடகங்களில் வெளியாகும் இன நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலான ஆக்கங்கள் மற்றும் கலாசாரச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் ஆபாசமான புகைப்படங்கள், காட்சிகள் ஆகியன பற்றியும் கிழக்கு இதழானது கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் முன் வைத்து வருகின்றது. இதனால் இந்த இதழுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களும் இருந்து வருகிறது.
இவ்விதழானது கிண்ணியன் இன்டர்நெஷனல் பிரைவேட் லிமிட்டட் இன் ஊடகப் பிரிவான கே.ஐ மீடியா குரூப் இனால் மேலாண்மை செய்யப்படுகின்றது.